சிகப்பு நாடா வார இதழ் எங்களை பற்றி தமிழின் முதல் புலனாய்வு இதழாக சிகப்பு நாடா இதழ்

1970 ஆம் ஆண்டு குமாரசாமி என்ற கயிலை மன்னன் அவர்களால் தொடங்கப்பட்டது…மாதம் தோரும் இருமுறை என்று வெளிவந்தது

சிகப்பு நாடா என்ற பெயர் வரக் காரணம்

அரசாங்கத்தின்  மிகமுக்கிய விவகாரங்களை ‘ரெட் டேப்’ (சிகப்புநாடா) பைலில் கட்டி வைத்திருப்பார்கள்.  அந்த முக்கிய பைலில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கும்.   அந்தப் பைலில் கட்டப்பட்டிருக்கும்  ரகசியங்கள் சிகப்புநாடாவில் இதழில் வெளிவரும்.

சிகப்பு நாடாவில் வந்த செய்தியை பார்த்து அரசு உயரதிகாரிகள்  ஆடிப் போய்விடுவார்கள். அது அரசாங்க அளவில் எதிரொலித்தது.

செய்தியை கண்டு அஞ்சியோர்

அப்போது சிகப்புநாடா பேப்பர் வடிவில் பன்னிரண்டு பக்கமாக வெளிவந்தது. அரசாங்கத்தின் அனைத்து துறைகளின் ஊழல்களையும் சிகப்புநாடா புலனாய்வு செய்து மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை துணிச்சலாக செய்து வந்தது. வருவாய்த்துறை, காவல்துறை, பதிவுத்துறை,சிறைத்துறை மற்றும் ஆர்.டி.ஓ உள்ளிட்ட மிக முக்கியதுறைகளின் தவறு செய்த உயரதிகாரிகள் சிகப்புநாடாவில் வரும் செய்திகளைக் கண்டு அஞ்சி நடுங்குவர். அவர்களைப் பற்றிய செய்திகளால் அவர்கள் துறைரீதியான பல்வேறு பிரச்னைகளை சந்தித்தார்கள். சில சமயங்களில் பதவியே பறிபோனதும் உண்டு.

எதிர்ப்புகள், வழக்குகள்

அதனால் பலமுனைகளில் வந்த எதிர்ப்புகளை சிகப்புநாடா சந்திக்க வேண்டியிருந்தது. நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளும் சிகப்புநாடாவின் மீது தொடுக்கப்பட்டன. அவற்றை துணிச்சலாக தனி ஆளாக எதிர்கொண்டார் கயிலைமன்னன். வழக்கறிஞர் வைத்து வாதாடாமல் தானே நேரடியாக நீதிமன்றத்தில் இறங்கி சட்ட நுணுக்கங்களை முன்வைத்து வாதாடி அனைத்து வழக்குகளிலிருந்தும் வெற்றிப் பெற்றார்.

பதவி பறிபோனவர்கள்

‘சிகப்புநாடா’ இதழ் வெளிவரும்போதெல்லாம் தவறு செய்த உயரதிகாரிகள் ‘சிகப்புநாடா’ இதழை வாங்கிப் பார்த்து தன்னைப்பற்றி செய்தி வெளிவந்திருக்கிறதா? என்று பார்த்து அவர்களைப் பற்றி செய்தி வரவில்லை என்று தெரிந்தால், ‘அப்பாடா! இப்போது தப்பித்தோம்’ என்று கூறி நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்று அரசு அலுவலக வட்டாரத்தில் ஒரு பேச்சு உண்டு.

நேர்மையானவர்களின் வரவேற்பு

சிகப்புநாடாவில் உண்மைக்கு புறம்பான செய்திகள் ஒருபோதும் வந்ததில்லை. சிகப்புநாடா பெயரைச் சொன்னாலே தவறு செய்வோர் அலறுவார்கள். அதே சமயம் நல்லது செய்வோர் ,நேர்மையான அதிகாரிகள், அரசியல்வாதிகள் மத்தியில் சிகப்புநாடாவுக்கு பெரும் வரவேற்பு இருந்தது.

பி.ஆர்.அண்ணாச்சி

சிகப்புநாடா நிறுவனர் கயிலை மன்னுக்கு உடல்நிலை உடல்நலம் குன்றி  1999 –ல் அமரர் ஆனார். அவரது மறைவுக்கு பின்  அவரது சகோதரரும், பி.ஆர். அண்ணாச்சி என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் பி.ராமச்சந்திரன் அவர்கள் சிகப்புநாடா இதழை தொடர்ந்து நடத்தினார். இன்னும் வேகத்துடனும், நேர்மை மாறாமலும் நடத்தி வந்தார். பல்வேறு தளங்களிலிருந்து எதிர்ப்புகள் வந்த போதிலும் அவற்றையெல்லாம், எதற்கும் அஞ்சாமல், யாருக்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல் தொடர்ந்து நடத்தி வந்தார்.

பி.ஆர்.பிரதாப் சந்தர்

பி.ஆர்.அண்ணாச்சி அவர்கள் 03.07.2014-ல் அமரர் ஆனார். அவரது மறைவுக்கு பின் அவரது மகன் பி.ஆர். பிரதாப் சந்தரை ஆசிரியராகக் கொண்டு சிகப்புநாடா இதழ் அதே பாரம்பரியத்துடன் மாதம் இருமுறை இதழாக வந்துக் கொண்டிருக்கிறது. செய்தியில் உண்மை, நேர்மை எள்ளளவும் குறையாமல், இன்னும் அதிக உத்வேகத்துடன், இளமை வேகத்துடன் சிகப்பு நாடா இதழ் 47 வது வருடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

தற்போது சிகப்புநாடா இணையதளத்திலும் வந்து கொண்டிருக்கிறது.  ஐம்பது பைசா இதழாக தொடங்கப்பட்டு, நவீன தொழில் நுட்பத்தின் வடிவமாக இணையதள வடிவிலும் சிகப்பு நாடா வாசகர்கள் சிகப்புநாடா செய்திகளை காணலாம்.

Sigappu Nada Leading Tamil Magazines Tamil News and Media
இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More