ஸ்பெஷல்
Now Reading
சமுதாய காவலர் சரித்திர நாயகர்
0

சமுதாய காவலர் சரித்திர நாயகர்

by editor sigappunadaJuly 1, 2016

நினைவுகூறுகிறோம்!

‘சிகப்புநாடா நிறுவனர் பி.ஆர்.அண்ணாச்சியின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள்


AMS_4382

சிகப்புநாடாவின் நிறுவனர் பி.ஆர். அண்ணாச்சியின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் வருகிற 3.7.2016 அன்று நடைபெற இருக்கின்றது. அண்ணாச்சியின் நினைவலைகளை வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறது சிகப்புநாடா’.

நெல்லை மாவட்டம், நாடார் அச்சம்பாட்டில் 25.5.1934 அன்று பால் பாண்டியன் நாடார், சொர்ணாம்மாள் தம்பதியரின் வாரிசாக தோன்றியவர், ‘அண்ணாச்சி’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட, பி.ராமச்சந்திரன் நாடார்.

தேச பக்தியும், தெய்வீகமுமே தனது உயிர் மூச்சு என்று வாழ்ந்த ‘அண்ணாச்சி’ தமிழகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடார் இன மக்களின் நம்பிக்கை நாயகனாகவும், அப்பாவி ஏழை மக்களின் பாதுகாப்பு அரணாகவும் வாழ்ந்தவர்.

கல்வியறிவில்லா மக்களுக்கு கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின், நட்பையும், பாசத்தையும் பெற்ற, அண்ணாச்சி, பள்ளியில் ஆசிரியராக தனது பணியைத் தொடங்கி, ஏழை பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியவர்.

அவரது சகோதரர் கயிலை மன்னன் அவர்கள், ‘சிகப்பு நாடா’ வார இதழைத் தொடங்கி சமூக அவலங்களுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு, பத்திரிகையுலகில் பெரும் புரட்சி நடத்தியவர். பத்ரிகையாளர்களுக்காக குரல் கொடுத்தவர். எவ்வளவோ எதிர்ப்புகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு சிகப்புநாடாவை நடத்தி வந்தார்.

அவரது வழியில் பி.ஆர். அண்ணாச்சி அவர்களும் சமூக விரோத சக்திகளையும் களையெடுக்க பல போராட்டங்களுக்கு இடையில் சிகப்புநாடாவை தொடர்ந்து நடத்தி வந்தார்.

தன்னுடைய வீட்டிற்கு யார் எந்த உதவி கேட்டு வந்தாலும் அவர்களுக்கு அண்ணாச்சியும், அவரது துணைவியார் சொர்ணக்கிளி அம்மாளும் உணவு வழங்கி அவர்கள் சாப்பிட்ட பிறகே, வந்த காரணம் பற்றி விசாரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

சமூக விரோதிகளாலும், ஆட்சியாளர்களாலும் பாதிக்கப்பட்டு, வாழ்விற்காக போராடிய மனிதர்களுக்கு பாதுகாவலராகவும், அவர்களின் நலனுக்காக துணிச்சலுடன் செயல்பட்டும் ‘மாவீரன்’ என்று பெயரெடுத்தவர் பி.ஆர்.

நாடார் இன மக்கள் மட்டுமல்லாது, அனைத்து சமுதாய  ஏழை எளிய மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அங்கு முதல் நபராக நின்று போராடியும், அவர்களுக்காக உழைத்தும் வந்தவர்.

சமூக சேவையிலும், பொது நலத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அண்ணாச்சி, தி.மு.க., அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க. என்று எல்லா அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், நண்பராக இருந்தவர்.

எந்த நிலையிலும், யாருக்காகவும் எப்பொழுதும் தான் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காத அண்ணாச்சி தன் வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளராகவே வாழ்ந்தவர், இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டவர்களை, தனது நியாயமான வாதத்தின் மூலம் வதம் செய்தவர் அண்ணாச்சி.

சிகப்பு நாடாவில் தொடர்ந்து அவர் எழுதி வந்த கட்டுரைகள் நடுநிலைக்கும், நேர்மைக்கும், துணிச்சலுக்கும் ஆதாரமாகும்.

யார் தவறு செய்தாலும் தவறுதான் என்று, தனது எழுத்துக்களால் துணிச்சலுடன் சுட்டிக் காட்டியவர். அதனால்; பகைவரும் என்ற போதும் அதற்கு அஞ்சாத அஞ்சா நெஞ்சனாக வாழ்ந்தவர் அண்ணாச்சி.

AMS_4385

கடைசி மூச்சு உள்ளவரை, நாடார் இனத்திற்காகவும், ஏழை எளியமக்களுக்காகவும், இந்து மதத்திற்காகவும் தேச ஒற்றுமைக்காகவுமே வாழ்ந்து 3.7.2014 அன்று மறைந்தார்.

அண்ணாச்சியின் முதல் நினைவு நாளில், அண்ணாச்சியின் மணிமண்டபத்தை திறக்க அவர் குடும்பத்தினர் அதற்கான பணியில் ஈடுபட்டு, 3.7.2015 அன்று மத்திய அமைச்சரும் வாழும் காமராஜருமான பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களால் சென்னை வேளச்சேரியில் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

manimandappam

மணிமண்டபம்

 

மணி மண்டபத்தைத் திறந்து வைத்துப் பேசிய, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், “ அண்ணாச்சி பி.ஆர். எனது நீண்ட கால நண்பர். பழகுவதற்கு இனிமையானவர். உதவி என்று அவரைத் தேடி வந்தவருக்கெல்லாம் உழைத்து வந்தவர்.” என்று புகழாரம் சூட்டினார்.

அவரது இரண்டாம் ஆண்டு நினைவுநாளில் அவரது  நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில் ‘சிகப்புநாடா’ பெருமை கொள்கிறது.

                              – ஆசிரியர்

 

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

Leave a Response