சினிமா
Now Reading
சினிமாவை மதிக்காத நடிகைகள்
0

சினிமாவை மதிக்காத நடிகைகள்

by editor sigappunadaJuly 1, 2016

 

Tamanna-in-Veeram-movie-stills-(1)767

படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு எப்படியாவது வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்குவதும்,  வாய்ப்பு கிடைத்தபிறகு தலைகால் புரியாமல் ஆடுவதும் ஒரு ரகம். ஏறிவந்த ஏணியை மதிக்காமல் எட்டி மிதிப்பது ஒரு ரகம். தமிழ்ச் சினிமாவில் சில நடிகைகள் இரண்டாவது ரகம். அதாவது அவர்கள் நடித்த படத்தின் விழாக்களுக்குக் கூட வரமுடிந்தும் வராதவர்கள்.

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘தோழா’ படத்தின் ‘சக்ஸஸ் மீட்’  நடந்தது. அந்தப் படத்தில் நடித்த கார்த்தி கலந்து கொண்டார். ஆந்திராவிலிருந்து நாகார்ஜுனாவும் வந்து கலந்து கொண்டார்.ஆனால் சென்னையிலேயே இருக்கும் நடிகை தமன்னா மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதுமட்டுமல்ல இதற்கு முன்பு நடந்த ஆடியோ வெளியீட்டு விழா, படம் பற்றிய பத்ரிகையாளர் சந்திப்பு ஆகியவற்றிலும் கூட கலந்துகொள்ளவில்லை. பிஸியான நடிகரும், இந்திய அளவில் தெரிந்தவரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான நாகார்ஹுனா ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்து கலந்துகொள்ளும்போது சென்னையிலேயேலிருக்கும் தமன்னா கலந்துகொள்ளாதது சினிமாவை அவர் எந்த அளவிற்கு மதிக்கிறார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு கோடம்பாக்கத்தினர்.

nayanthara-raja-rani1

இவர் மட்டுமல்ல; இவரைபோலவே நடிகை நயந்தாராவும் அவர் நடித்த படம் சம்மந்தமான எந்த விழாவிலும் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வருகிறார். அதைத் தனது வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இவர் தான் நடித்த ‘மாயா’ பட விழாவிலும் கலந்து கொள்ளவில்லை. அதேபோன்று விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த  ‘ நானும் ரவுடிதான்’ படத்தின் விழாக்களிலும் கலந்து கொள்ளவில்லை. படத்தின் தயாரிப்பாளர், ஹீரோ விஜய் சேதுபதி ஆகியோர் எவ்வளவோ வற்புறுத்தியும் வருவதை தவிர்த்துவிட்டார். இவ்வளவுக்கு அவர்  அந்த நேரங்களில் சென்னையில்தான் இருந்திருக்கிறார். சினிமாவால் வாழ்வு பெற்றவர்கள் சினிமாவை மதிக்காமல் போவது அவர்களுக்கு நிச்சயம் சரிவைத்தான் தேடித் தரும் என்கின்றனர் தயாரிப்பு நிர்வாகிகள்.

வரவாய்ப்பு இருந்தும், வராமல் தவிர்த்ததை இயலாமை என்று சொல்வதா? ஆணவம் என்று சொல்வதா?.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
100%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response