அரசியல்
Now Reading
‘சி.எம் – பி.ஏ’ என்று ஏமாற்றிய போதை ஆசாமி
0

‘சி.எம் – பி.ஏ’ என்று ஏமாற்றிய போதை ஆசாமி

by editor sigappunadaJuly 1, 2016

மழை நின்று மீண்டும் வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. இந்த வெயிலில் வம்பன் எப்படி வருவாரோ என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த போது தீடீரென்று பின்பக்கமாக வந்து உட்கார்ந்தார் வம்பன். பரபரப்பு விஷயம் ஏதேனும் உண்டா? என்று  கேட்டோம்.

“ பரபரப்புக்கு பஞ்சமில்லை, குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சமில்லை. முதலில் பி.ஏ.க்கள் மேட்டரை சொல்கிறேன். தமிழக கல்வித்துறை அமைச்சராக இருக்கிறாரே பெஞ்சமின், அவர்தான் சிக்கலில் மாட்டித் தவிக்கிறார். அவருடைய பி.ஏ.களாக ராஜன், பிரபு, ஜோயல் என்ற மூன்று பேரும் அமைச்சரின் பி.ஏ.களாக இருக்கின்றனர். பி.ஏ.கள் மூன்று பேருமே அவருடைய அக்கா  மகன்கள். மூன்று பேரும் ஒரே குடும்பத்திலா என்று ஒரு சர்சை கிளம்பியது. அதை  ஒருவழியாக சமாளித்து விட்டார். ஆனால்  அவர் பெயரை வைத்து பி.ஏ.க்கள். டிரான்ஸ்பர், போஸ்டிங், இன்னும் பல விஷயங்களை வைத்து ஏகத்துக்கும் கல்லா கட்டி வருகிறார்கள். அமைச்சர் பெயரில் ஆட்டம் போடும் விஷயம் உளவுத்துறை மூலம் மேலிடத்திற்கு சென்றுவிட்டதாம். அதனால் பி.ஏ.க்கள் மாறுகிறார்களோ இல்லையோ, அமைச்சர் மாற்றம் இருக்கும் போல தெரிகிறது” என்றார் வம்பன்.

“ கடந்த வாரம் ஒரு முக்கிய சம்பவம் நடந்துள்ளதாமே’

“ சி.ம்.பி.ஏ. விவகாரம்தானே சொல்கிறீர். அதாவது கடந்த பத்தாம்தேதி மதியம்  அதிமுக கொடி கட்டிய  மகேந்திரா ஜைலோ கார் ஒன்று குன்றத்தூர் பத்திரபதிவு அலுவகத்திற்கு வந்து  நின்றது. பதிவு எண். டி.என். 73- டபிள்யூ -9885 ஆகும். அதில்  பயங்கர போதையில் இருந்த ஒரு ஆசாமி சப் ரிஜிஸ்டாரை வரச் சொல் என்று காரில் இருந்தபடியே கூறியிருக்கிறார். அதைக் கேட்ட சப்- ரிஜிஸ்டார் தன் உதவியாளரை அனுப்பி என்ன விஷயம் என்று கேட்கச் சொல்லியிருக்கிறார். உதவியாளரும் அப்படி கேட்க. போதை ஆசாமிக்கு கோபம் வந்து விட்டது. சி.எம்.. பி.ஏ.கூப்பிட்டா வரமாட்டானா ரிஜிஸ்டார்?என்று கேட்டிருக்கிறார். அவரின் நடவடிக்கை மீது சந்தேகமடைந்த உதவியாளர், சி.எம்.பி.ஏவுக்கு இங்கு என்ன வேலை? என்று சில கேள்விகளை கேட்க, அவரோ போதையில் உளறிக் கொட்டியிருக்கிறார். உதவியாளார் முறைக, போதை ஆசாமி எஸ்கேப்.”

 

“ அடுத்து ஒரு மேட்டர். காஞ்சிபுரத்தில் இப்போது சூடான மேட்டர் என்ன தெரியுமா? காஞ்சிபுரம் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக இருப்பவர் மனோகரன். இவ பெண்கள் விஷயத்தில் படு வீக்கம்.  அலுவலகத்திற்கு வரும் கான்ட்ராகடர்களிடம் நல்ல அயிட்டமா இருந்தா அனுப்பு! என்று கூற, தலையில் அடித்துக் கொண்டபடி சில கான்ட்ராக்டர்கள் செல்கிறார்களாம். அதோடு மட்டுமல்ல, அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர் என்று சொல்லி வசூல் செய்து வருகிறாராம். இந்த விஷயம்தான் காஞ்சிபுரத்தில் சூட்டை கிளப்பியிருக்கிறது.”

“திமுகவில் செய்தி ஒன்றும் இல்லையா?”

“திமுக- அதிமுக இரண்டும் சேர்ந்த செய்தி இருக்கிறது.”

“இரண்டும் சேர்ந்த செய்தியா? அது என்ன?”

கே.சி.வீரமணி

கே.சி.வீரமணி

“ அதாவது. திமுகவில் ஒருவரை கட்டம் கட்டுவது எளிதாக நடக்காது. வேலூர் மாவட்டம் கே.சி.அழகிரியை தி.மு.க கட்டம் கட்டியது.   அழகிரி தனது தம்பியான கே.சி.வீரமணி வெற்றிப் பெற பல உள்குத்து வேலைகளை செய்ததுதான் காரணமாம்.கே.சி. வீரமணி வெற்றிப் பெற்று பத்திர பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சராகவும் ஆகிவிட்டார். அவரிடம் போய் சொல்லியிருக்கிறார் அழகிரி. ‘அண்ணா! நீங்கள் கவலைப்படாதீர்கள். இனிமேல் எனக்கு ஆல் இன் ஆல் நீங்கதான் ‘ என்று கூறி ஆறுதல்படுத்தியிருக்கிறார்.”

 

“ அடுத்து ஒரு ஆளும்கட்சி மேட்டர். ஶ்ரீபெரும்புதூர் தொகுதி ஏம்.எல்.ஏ பழனி. தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போனதற்கு சசிகலாதான் காரணம் என்று கோபத்தில் இருக்கிறாராம். சமீபத்தில் கூட அவரை சந்திக்க  சிலர் சென்றிருக்கின்றனர். அதில் ஒருவர் மீது சந்தேகம் வரவே அவரின் மீது எரிந்து விழுந்திருக்கிறார். காரணம் அவர் சசிகலாவின் ஆளாம். ‘ஆறு மாதத்தில் மந்திரி சபை மாற்றம் உண்டு. அதில் என் பெயர் நிச்சயம், இருக்கும்’ என்று தனது நெருங்கிய வட்டாரத்தில் பேசி வருகிறார்.”

“போலீஸ் மேட்டர் ஒன்னுமே சொல்லவில்லையே”

“ சொல்கிறேன். தற்போது டிஜி.பியாக  இருக்கும் அசோக்குமார் மாற்றப்பட வாய்ப்பிருக்கு”

secretariat- 01

“ திடீரென்று மாற்ற வேண்டிய காரணம்”

“ 1982- ஆம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த அசோக்குமார் அடுத்து திமுக ஆட்சிதான் என்ற எண்ணத்தில் தேர்தலுக்கு முன்பு மு.க. ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். இந்த விஷயத்தை அதிமுகவினர் சிலர் முதல்வரிடம் போட்டுக் கொடுக்க டி.ஜி.பி. மீது கடுப்பில் இருக்கிறாராம். எனவே விரைவில் டி.ஜி.பி. மாற்றம் இருக்கும் என  கோட்டை வட்டாரத்தில் தகவல் கிடைத்தது. அதை அப்படியே உம்மிடம் கொட்டிவிட்டேன்.”

“ இன்னும் ஒரே ஒரு மேட்டர் தேமுதிக மேட்டர் இருக்கு. தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கட்சித் தொண்டர் ஒரு கடிதம் எழுதியது, கட்சிக்குள் விஸ்வரூபம் எடுத்தல்லவா.  அதேபோன்று இப்போது வேறு ஒரு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது அதனால் கேப்டன் டென்ஷனில் இருக்கிறாராம்”

vijaykanth7

“ அது என்ன புது பிரச்னை”

“ கேப்டன் கட்சிக்குள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்னை கிளம்புகிறது. மாவட்ட நிர்வாகிகள் பன்னிரென்டு பேர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களாம். மாவட்ட செயலாளர்களும் கேப்டனை நேரடியாக சந்தித்து எதிர்ப்பை காட்டி வருகிறார்களாம். இதுவரை கட்சிக்குள் இப்படி ஒரு எதிர்பை விஜயாகாந்த் சந்தித்ததில்லையாம். அதனால் ரொம்பவே டென்ஷ்னில் இருக்கிறார்.  உன்னால்தான் இவ்வளவு பிரச்னை என்று பிரேமலதாவிடம் சீறிப் பாய்ந்திருக்கிறார் வஜயகாந்த். ஏதாவது செய்வோம் கவலைபடாதீர்கள் என்று ஆறுதல் கூறியும் விஜயகாந்த் சமாதானம் ஆகவில்லையாம். அதனால் பிரேமலதா ஒரு திட்டம் தீட்டியிருக்கிறார். அதாவது கட்சியில் பிரேமலதா ஆதரவு நிர்வாகிகளை வரவழைத்து, நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். நமது கட்சியை யாராலும் அழிக்கமுடியாது’ என்று ஆதரவு குரல் கொடுக்க திட்டமிட்டுள்ளாராம். அதன்படி சில மாவட்ட நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.” என்று கூறிய வம்பன் சிட்டாக பறந்தார்.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response