க்ரைம்
Now Reading
செத்துக்கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்பு துறையை ஒழித்துவிட்டால் அரசுக்கு பலகோடி மிச்சமாகும்
0

செத்துக்கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்பு துறையை ஒழித்துவிட்டால் அரசுக்கு பலகோடி மிச்சமாகும்

by editor sigappunadaJuly 1, 2016

எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம். லஞ்சம் இல்லாத துறையே இல்லை. லஞ்சம் இல்லாமல் அரசாங்கத்தில் எந்த வேலையும் நடப்பதில்லை. கடைநிஅலை ஊழியர் முதல் கலெக்டர் வரை லஞ்சம் வாங்குவதையே கொள்கையாக வைத்து செயல்படுகிறார்கள். தெரிந்தே லஞ்சம் கொடுக்கிறார்கள், தெரிந்தே லஞ்சம் வாங்குகிறார்கள்.  என்ன செய்வது என்று குற்றம்சாட்டுகிறார்கள் மக்கள்.

Evening-Tamil-News-Paper_79465448857

லஞ்சம் வாங்குவதைத் தடுப்பதற்காவே தனியாக உருவாக்கபட்டதுதான் லஞ்ச ஒழிப்புத் துறை. வெளிப்படையாக எல்லாம் தெரிந்தே லஞ்சம் வாங்குகிறார்கள். லஞ்ச ஒழிப்புத் துறை இருந்தும் இப்படி லஞ்சம் தலைவிரித்தாடுவதற்குக் காரனாம் என்ன? என்ற கேள்விக்கு சமூக ஆர்வலர்கள் பதில் தருகிறார்கள்.

காஞ்சிபுரம் கபிலர் தெருவைச் சேர்ந்த முத்துராமன் என்பவர், “  லஞ்சப் பேய் பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம், லஞ்சம் வாங்குவோர், அரசுத்துறைகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தனர். இவர்கள், நேர்மையான ஊழியர்களை கண்டு பயந்தனர். மக்களிடம் லஞ்சம் கேட்கவே கூச்சப்பட்டனர்; கைநீட்டி காசு வாங்க அச்சப்பட்டனர். இன்றோ, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
அரசுத்துறைகளில் லஞ்சம் வாங்குவோர் எண்ணிக்கை பெருகிவிட்டது. நேர்மையாக பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. லஞ்சம் வாங்குவோரைப் பார்த்து, லஞ்சம் வாங்காத ஊழியர்கள் அச்சப்படும் நிலையும் வந்துவிட்டது. இதற்குக் காரணம், லஞ்சம் வாங்குவோரே, ‘மெஜாரிட்டி’யாக உள்ளனர். ‘லஞ்சம் வாங்குவது ஒன்றும் தப்பில்லை; அரசாங்க வேலை பெறவும், விரும்பிய இடத்துக்கு, ‘டிரான்ஸ்பர்’ பெறவும் பல லட்சங்களை செலவழிக்கிறோம். முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற வேண்டாமா? என, லஞ்சம் வாங்குவதை, நியாயப்படுத்த துணிவும் வந்துவிட்டது.

அரசுத்துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரி அல்லது ஊழியர் லஞ்சம் வாங்காமல் பணியாற்றினால், தற்போது அது, அதிசயத்துக்குரிய செய்தியாக வெளியாகிறது. இந்த அவலத்தை என்னவென்று சொல்வது? ஒருவர் லஞ்சம் வாங்காமல், நேர்மையாக பணியாற்றுவது என்பது, வாழ்வில் அவர் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்க நெறி கோட்பாடுகளில் ஒன்று. ஆனால், அவ்வாறான ஒழுக்க நெறி கோட்பாட்டை ஒருவர் பின்பற்றுவதே ஆச்சரியத்துக்கும், பாராட்டுக்கும் உரியதாக மாறிவிட்டது. இது, நாம் சார்ந்திருக்கும் சமூகம் எப்படிப்பட்ட சீரழிவுப்பாதையில், பேராபத்தை நோக்கிச் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.” என்கிறார்.

தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சென்னை நந்தனத்தை சேர்ந்த பாலு என்பவர், “ முன்பெல்லாம், சட்டத்தை மீறி காரியங்களை செய்ய மட்டுமே, அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் கேட்டார்கள். இப்போது, சட்டப்படியான ஒரு காரியத்தைச் செய்யகூட லஞ்சம் கேட்கிறார்கள்; அதுவும் மிரட்டிக் கேட்கிறார்கள். ‘இந்த பணிக்கு, ‘இன்ன ரேட்’ என்று விலையையும் நிர்ணயம் செய்துவிட்டார்கள். ‘கரன்சி’யை காட்டாதவர்களின் மனுக்கள், கசங்கிய காகிதமாக குப்பைக்கூடைக்குப் போகின்றன.

e0ae9ae0af81e0ae99e0af8de0ae95-e0aeaae0af86e0aea3e0af8d-e0ae85e0aea4e0aebfe0ae95e0aebee0aeb0e0aebf-e0aea4e0af87e0aea9e0af8de0aeae நம் நாட்டில் லஞ்சமும்- ஊழலும் கக்கூஸ் முதல் சட்டமன்றம் வரை நாறிக்கொண்டிருக்கிறது. எல்லா துறைகளிலும், கல்லாப்பெட்டிகள் நிரம்பி வழிகின்றன.சான்றிதழ் வாங்குவதாக இருக்கட்டும், அரசின் நலத்திட்டத்தை பெறுவதாக இருக்கட்டும், லஞ்சம் கொடுக்காமல் எந்த காரியத்தையும் அரசு அலுவலகங்களில் சாதிக்க முடியாது. இதைத் தடுப்பதற்காகத்தான் லஞ்ச ஒழிப்புத்துறை என்ற ஒன்றை தனியாக உருவாகியது தமிழக அரசு. ஆனால் பெயரளவிற்கு இங்கொன்றும், அங்கொன்றுமாக சில சம்பவங்களைப் பிடித்து போக்கு காட்டுகின்றனர்.  அதுவும் உப்பும் சப்பும் இல்லாத ஒன்றாக இருக்கும். நூறு ரூபாய், ஐநூறு ரூபாய் லஞ்சம் வாங்கியவர்களை பிடிக்கிறார்கள்.அதனால் தீர்ந்துவிடுமா? லஞ்ச ஒழிப்பு போலீசார். இதைத்தான் அவப்போது செய்திதாள்களிலும், தொலைகாட்சிகளிலும் வரும்படி செய்து ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதைப்போல காட்டிக்கொள்கிறார்கள். லஞ்சம் ஒழிந்து விட்டதா? கொஞ்சமாவது குறைந்திருக்கிறதா?. இல்லையே? லஞ்சம் வாங்குவதை தடுக்கவேண்டிய போலீஸே லஞ்சம் வாங்கினால் லஞ்சம் எப்படி குறையும்? தமிழ்நாடு முழுக்க உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு முழுவதும் லஞ்சம் நிறைந்ததாக மாறிவிட்டது. அது லஞ்சம் ஒழிப்புத்துறை அல்ல. லஞ்சம் வாங்கும் துறை, பெயரை இப்படி மாற்றி வைத்துவிடலாம். 2010 ஆம் ஆண்டு பெருமாள் என்ற லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ஒரு டாக்டரிடம் ஒரு லட்சத்து இருபதாயிரம் பணம் வாங்கும்போது பிடிபட்டார். இது வெட்க கேடு இல்லையா? இதுபோல் வெளிவராத லஞ்சலாவண்யம் இன்னும் எத்தனையோ இருக்கிறது.

பெருமாள்

பெருமாள்

எப்படியும் லஞ்சத்தை தமிழக அரசால் ஒழிக்க முடியாது என்ற நிலையாகிவிட்டது. எனவே; அரசே ஒவ்வொரு சான்றிதழுக்கும் இவ்வளவு ரேட் என்று அறிவித்து விடலாமே. லஞ்சத்தைத்தான் ஒழிக்க முடியவில்லை, லஞ்ச ஒழிப்புப் பிரிவை ஒழித்துவிடலாமே. அப்படி செய்வதால் லஞ்ச ஒழிப்பு பிரிவுக்குச் செலவிடப்படும் சில நூறு கோடிகளாவது அரசுக்கு மிச்சமாகும். அதுமட்டுமல்ல, அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொழித்து விளையாடும் பத்திர பதிவு, உணவுப் பொருள் வழங்கல் துறை, காவல்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் மூலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்குத் தொடர்ந்து பணம் போவதாக குற்றச்சாட்டும் சமீபத்தில் எழுந்துள்ளது. அப்படிப் பார்த்தால் அந்த பணத்தையும் மக்களிடம்தான் வசூல் செய்கிறார்கள். எனவே; லஞ்ச ஒழிப்பு பிரிவை ஒழித்துவிட்டால் போதும் லஞ்சம் குறைவாக கொடுக்கலாம்” என்று விரிவாக எடுத்து வைத்தார்.

tblSambavamnews_65460932255_thumb[26]

இது குறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் கேட்டபோது, “ தமிழகத்தில் டிஜிபி தலைமையில் 3 எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் 41 பிரிவுகள் மூலம் 24 டிஎஸ்பிக்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயங்கி வருகிறது. லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம். லஞ்சம் வாங்குபவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று அரசுதுறை அலுவலகங்களில் விழிப்புணர்வு வாசகங்களுடன் அதிகாரிகளின் செல் நம்பருடன் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

எங்களுக்குப் புகார் வந்தால்தான் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும். அதுமட்டுமல்ல. லஞ்சம் ஒழிப்பு என்பது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவு என்று இணைந்துதான் இருக்கிறது. எங்களுக்கு வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏகப்பட்ட நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறோம். ஆனால் அவர்கள் நீதிமன்ற தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார்கள். .எங்களிடம் வந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புகார்களில் விசாரணை நடத்தியதில் 456 பேர் மீதான குற்றங்கள் ம்ட்டுமே நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பிரிவு வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் கிடையாது. மற்ற வழக்குகளோடு சேர்த்து விடுகின்றனர். இதனால் விசாரணைக்கு காலதாமதம் ஆகிறது. எனவே  வழக்குகளும் நீர்த்துப் போகின்றன.

அதுமட்டுமல்லாமல் துறைரீதியான விசாரணை, டிரிபியுனல் விசாரணை இப்படிப் பல்வேறு காரணங்களால் 12728 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.” என்று விளக்கமளித்தனர்.

தமிழகத்தில் டிஜிபி தலைமையில் 3 எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் 41 பிரிவுகள் மூலம் 24 டிஎஸ்பிக்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு பிரிவு இயங்கி வருகிறது. லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம். லஞ்சம் வாங்குபவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று அரசுதுறை அலுவலகங்களில் விழிப்புணர்வு வாசகங்களுடன் அதிகாரிகளின் செல் நம்பருடன் எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை பேப்பர் அளவில் மட்டுமே இருக்கிறது என்பது வேதனையிலும் வேதனை.

நம்நாட்டு அரசியலுக்கு லஞ்ச ஒழிப்பு பிரிவு தேவையா? என்று கேள்வி எழுப்பு க்கின்றனர் பொதுமக்கள். ஒன்று லஞ்சம் ஒழிய தீவிரமாக வழிவகை காண வேண்டும், இல்லையேல் லஞ்ச ஒழிப்பு பிரிவை ஒழித்துவிட வேண்டும்.

                           -எஸ். சுபத்ரா

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
50%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
50%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response