சினிமா
Now Reading
தாணுவை மிரட்டி ‘கபாலி’ வாங்கப்பட்டதா?
0

தாணுவை மிரட்டி ‘கபாலி’ வாங்கப்பட்டதா?

by editor sigappunadaJuly 1, 2016

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக,  அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் ரஜினிக்கும் பிரச்னைக்கும் பஞ்சமில்லை. அரசியல்  ரீதியான பிரச்னைகள், படம் தோல்வி என்றால் பணம் திருப்பிக் கொடுப்பதில் பிரச்னை, அவருடைய ‘ஆஸ்ரம்’ பள்ளியின் அனுமதி பிரச்னை. இப்படி ஏகப்பட்ட பிரச்னைகள் அவரைச் சுற்றி வலம் வருகின்றன.  சமீபத்தில் கூட ‘லிங்கா’ படத் தோல்விக்காக வினியோகஸ்தர்களுக்குப் பணம் திருப்பி கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டு அது இன்னும் முழுமையாக முடியாமல்  புகைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ‘கபாலி’ படம் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அதுதொடர்பான சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.  தயாரிப்பாளர் தாணுவிற்கும் ரஜினிக்கும் பிரச்னை,  அதனால் படம் ட்ராப் என்றெல்லாம் செய்தி வந்தது. இவற்றையெல்லாம் கடந்து படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டவுடன், அதுகுறித்தும் சர்ச்சை எழுந்தது. படத்தில் தலித்துக்களுக்கான அரசியல் பேசும் படம், மேல்தட்டு மக்களை அச்சுறுத்தும் படம் என்றெல்லாம்  செய்திகள் கிளம்பின. பாடல் வெளியீட்டு விழாவிற்கு ரஜினி வரவில்லை.  இதனால் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தி பரவ, பிறகு வதந்தி என்று முடிந்தது. இவைகளுக்கு தகுந்தார்போல் பாடல்கள் இணையத்தில் திருட்டுத் தனமாக வெளியிடப்பட, திட்டமிட்டதை விட ஒரு நாளுக்கு முன்னதாகவே  ஆடியோ வெளியிடப்பட்டது.

e499ea2c4c5352efb45af21babcc66b4_ft_m

சரி. ஒரு வழியாக பாடல் வெளியிடப்பட்டதே என்று நிம்மதியாக இருக்கவிடவில்லை.

‘கபாலி’ பாடல்கள் ‘ சாதி வெறியைத் தூண்டுகிறது’ என்று ஒரு பிரச்னை கிளம்பியது. கபாலி படத்துக்காக ரஜினி ரசிகர்கள் வடிவமைத்த போஸ்டர் ஒன்று சர்ச்சையில்  சிக்கியது. இப்படி சர்சைகளும் பிரச்னைகளும் நிறைந்ததாக ‘கபாலி’ படம் இருப்பதற்கு காரணம், அவர் சூப்பர் ஸ்டார்; அவர் பெயரை வைத்து வியாபாரம் செய்ய நினைக்கும் சில மலிவான ஊடகங்களும் பத்ரிகைகளும் தான் காரணம் என்கின்றனர் ரஜினி ரசிகர்கள் சிலர்.

ஆனால் ரஜினியின் நெருங்கிய வட்டமோ, “ இவை முழுக்க முழுக்க ரஜினி மீது எய்தப்படும் அரசியல் அம்புகளே. அதைப் பற்றி நாங்கள் கவலைப்படுவது இல் லை” என்று கூறுகிறது.

இந்தநிலையில் இன்னும் ஒரு சர்சையை எழுந்திருக்கிறது.

தாணு

தாணு

படத்தை வெளியிடும் உரிமையை விற்றுமுடித்த பிறகு, கபாலி ரிலீஸ் தேதியை அறிவிக்கலாம் என அமைதியாக இருந்தார் தயாரிபாளர் கலைப்புலி தாணு. அத்தனை கோடி, இத்தனை கோடி என ‘கபாலி’ படத்தின் ரைட்ஸ் குதிரை ரேஸாக போய்கொண்டிருந்த நிலையில் கபாலி திரைப்படத்தின் மொத்த தமிழகத் தியேட்டர் உரிமையையும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது.

அட அதிலென்ன? என்கிறீர்களா? அதில்தான் விஷயமே இருக்கிறது.  அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சசிகலாவின் உறவினர் இளவரசிதான்.

அவர் வாங்கியதில் பிரச்னை என்ன? சசிகலாவின் ஆட்கள் மூலம் தாணுவை தொடர்பு கொண்டிருக்கின்றனர். தாணு தரமறுக்கவே ஒருகட்டத்தில் மிரட்டப்பட்டு வேறுவழியில்லாமல் அவர் ‘கபாலி’ படத்தின் வெளியிடும் உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கு தாணு வழங்கியிருக்கிறார் என்று கோடம்பாக்கத்திலிருந்து வரும் ரகசிய தகவல் கூறுகிறது.

இதுபற்றி தகவல் உண்மையா? என்று கேட்க தயாரிப்பாளர் தாணுவை தொடர்பு கொண்டபோது தொடர்பை துண்டித்துவிட்டார்.

‘கபாலி’ படம் வெளிவருவதற்குள் இன்னும் என்னென்ன சர்ச்சைகள் வரப்போகிறதோ?

                     -எஸ்.பவித்ரா

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response