மாவட்டம்
Now Reading
நடவு மானியம் வழங்கியதில் மெகா மோசடி
0

நடவு மானியம் வழங்கியதில் மெகா மோசடி

by editor sigappunadaJuly 1, 2016

நெற் பயிரில் குறைந்த இடத்தில், குறைந்த செலவில், குறைந்த ஆட்களைக் கொண்டு நெல் நடவு செய்து, அதிக மகசூல் பெற்றிட இயந்திரத்தின் மூலம் ஒற்றை நாற்று நடவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Tamil_News_large_153778720160608015750_318_219

இயந்திர நடவிற்கு ஏக்கருக்கு  ஆறு கிலோ விதை நெல்லும், ஒரு ஆளும் போதும். ஆனால், கை நடவுக்கு  ஒன்பது முதல் பன்னிரண்டு கிலோ விதை நெல் தேவை. மேலும், இருபத்து ஐந்து ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இருப்பினும் கை நடவைவிட, இயந்திர நடவில் அதிக மகசூல் கிடைக்கிறது.

இதனால், இயந்திரத்தை பயன்படுத்தி ஒற்றை நாற்று நடவை ஊக்குவித்திட மத்திய, மாநில அரசுகள் இணைந்து தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு 1,200 ரூபாய் மானியம் வழங்கி வருகின்றன

இத்திட்டத்தில், கடலுார் மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்திற்கு 4.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 2 லட்சத்து 45 ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டது. அதில், 35 ஆயிரம் ஏக்கரில் இயந்திரத்தின் மூலம் ஒற்றை நாற்று நடவு செய்யப்பட்டது.

இயந்திர நடவு செய்த விவசாயிகள், வேளாண் துறை அறிவித்தபடி இயந்திரம், நாற்று தட்டுகளின் வாடகை ரசீது, நிலத்தில் இயந்திர நடவு செய்தபோது எடுத்த புகைப்படம் மற்றும் தேசிய வங்கி கணக்கு எண் ஆகியவற்றுடன் உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வேளாண் அலுவலகங்களில் வழங்கினர். இவர்களுக்கான மானியம், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதில், குறிஞ்சிப்பாடி தாலுகா குள்ளஞ்சாவடி குறுவட்டத்தில் நிலமே இல்லாதவர்களுக்கும், முந்திரி தோப்பு விவசாயிகளுக்கும் நெல் பயிரிட்டதற்கான மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும், உண்மையில் இயந்திரத்தை பயன்படுத்தி ஒற்றை நாற்று நடவு செய்த விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குள்ளஞ்சாவடி குறுவட்டத்தில் 1500 ஏக்கரில் இயந்திர நடவு செய்ததாக மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 500 ஏக்கர் மட்டுமே உண்மையில் இயந்திரத்தை பயன்படுத்தி நெல் நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 1000 ஏக்கர், மா, பலா மற்றும் முந்திரி தோப்புகளில், நெல் பயிரிட்டதாக மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோசடி, குள்ளஞ்சாவடி விவசாயிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மானியம் கோரி விண்ணப்பித்தவர்களின் புகைப்படங்களை, வேளாண் அதிகாரிகள் ‘மார்பிங்’ செய்து, வேறு நபர்களின் புகைப்படங்களை சேர்த்து, முந்திரி தோப்புகளின் சர்வே எண்ணை குறிப்பிட்டு மானியத்தை மோசடி செய்துள்ளதாக, அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது,’புகார் வந்துள்ளது. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

விவசாயிகள் வயிற்றில் அடிக்க எப்படிதான் மனசு வருகிறதோ?விவசாயிகள் பெயரில் மோசடி செய்தவர்கள் அந்த விவசாயிகள் விளைவித்த நெல்லில்தானே சாப்பிடுகிறார்கள். இந்த மோசடிக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு பணம் கொடுக்கும்போது அதை ஆய்வு செய்யாமல் எப்படி அதிகாரிகள் கொடுத்தார்கள். அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருந்திருப்பார்கள். அவர்களுக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

 

                   -சுபத்ரா

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
100%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response