Now Reading
பினாமியை மாட்டவிட்டு தப்பிக்க முயலும் வேந்தர் – வெளிவராத உண்மைகள்
0

பினாமியை மாட்டவிட்டு தப்பிக்க முயலும் வேந்தர் – வெளிவராத உண்மைகள்

by editor sigappunadaJuly 1, 2016

மருத்துவ நுழைவுத் தேர்வு ஓராண்டுக்கு தற்காலிகமாக  ரத்து விவகாரத்தை விட வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போன விவகாரம்தான் தற்போது சென்னையிலிருந்து காசி வரை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

06-1465203428-parivendar-madhan

‘ காசி சென்று கங்கையில் சமாதி அடைகிறேன்’ என்று ஒரு கடிதத்தை எழுதி வைத்து விட்டு மதன் மாயமான விவகாரம்  வெளியே தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகு பல சர்ச்சைகளும் வெளிவர தொடங்கியுள்ளது.

எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத் தலைவர் பச்சமுத்துவிற்கு மிக நெருக்கமானவர், பினாமி என்று கூறப்பட்ட மதன் என்ன ஆனார் என்பது புரியாத புதிராகவே நீடிக்கிறது.

எஸ்.ஆர். எம். மருத்துவ கல்லூரி மருத்துவ படிப்பிற்கு வசூல் செய்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மதன் எழுதிய கடிதம் அதைக் காட்டிக் கொடுத்தது. ‘ யாரும் பயப்படத் தேவையில்லை. வசூல் செய்த பணத்தை பச்சமுத்துவிடம் கொடுத்திருக்கிறேன். என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் சேர்த்து விடுவதாக பல லட்சம் வாங்கி மதன் மோசடி செய்து விட்டதாக அவர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவியத் தொடங்கின. அதே சமயம் எஸ்.ஆர்.எம் தரப்பிலும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அந்த கடிதம்

அந்த கடிதம்

இந்த நிலையில், ‘எங்கள் நிறுவனத்திற்கும், மதனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று கூறுகிறார் பச்சமுத்து. ஆனால்  எஸ்.ஆர்.எம். குழுமத்திற்கு நெருக்கமாய் இருந்த, இந்த விவகாரம் தெரிந்த சிலர் ‘ பச்சமுத்துவின் பினாமிதான் வேந்தர் மூவிஸ் மதன்.  கருப்பு பணம், மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான வசூல் பொறுப்பு என்று தன்னுடைய பண விவகாரங்களுக்கு எல்லாம் மதனையே பயன்படுத்தியுள்ளார். அவரைக் கொண்டு கட்சிக்கும் ஆள் திரட்டியிருக்கிறார். திடீரென்று அவரை யாரென்றே தெரியாது. எந்த சம்மந்தமும் இல்லை  என்று எப்படிக் கூற முடியும்.  இந்தப் பண விவகாரத்தில் சிக்கல் வரவே ஒரு கட்டத்தில் மதனிடம் நெருக்கத்தை குறைத்துக் கொண்டார் பச்சமுத்து.  மதன் அமைதியாகி ஒதுங்கி விடுவார் என்று நினைத்தார். ஆனால் மதன் ஒதுங்கவில்லை. இந்த விவகாரத்தை தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்ல, பிரச்னை பெரிதாகி வெளியே தெரிந்தால் மற்ற விவகாரங்களும் வெளியே தெரிந்து அதிலும் சிக்கி கொள்ளும் நிலை வருமே என்று பயந்த பச்சமுத்துவின் செட் அப் தான் இந்தக் கடிதம் விவகாரம். அவரது குடும்பத்தினர் அதை இவ்வளவு பெரிதாக்குவார்கள் என்று பச்சமுத்து நினைக்கவில்லை. எனவே; மதன் விவகாரம் தங்கள் பக்கம் திரும்பக் கூடாது என்று நினைத்துதான் பச்சமுத்துவும் ‘200 கோடி பணத்துடன் தலைமறைவாகி விட்டார் ’ என்று மதன் மீது புகார் கொடுத்தார்.” என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Dr_T_R_Pachamuthu_kvedr2

பச்சமுத்து

மேலும் அவர்கள், “  பச்சமுத்துவின் பல அந்தரங்க விஷயங்களில் சம்மந்தப்பட்டவராக மதன் இருந்திருக்கிறார். எனவேதான் மதன் வெளியே வந்தால்  பச்சமுத்துவின் பல வில்லங்க விஷயங்கள் வெளிவரும்.  அதனால், மதன் மறைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் மதன் கொலை செய்யப்பட்டு தடயம் தெரியாத அளவிற்கு மறைத்திருக்க வேண்டும்”  என்று குண்டை தூக்கிப் போடுகிறார்கள்.

இதேபோல மதன் நண்பர்கள் வட்டாரமும், “  மதன் மீது பழிபோட்டு தான் தப்பிக்க பச்சமுத்து நடத்தும் நாடகம் இது” என்கின்றனர்.

மேலும் அவர்கள், “  சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம், திருச்சி மற்றும் சென்னை மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு இடங்கள், பல்மருத்துவ இடங்கள், பொறியியல் படிப்புக்கான இடங்கள் ஆகியவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் விற்பனை செய்வதன் மூலமாக மதன், எஸ்.ஆர்.எம் நிறுவனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.250 கோடி வரை பணம் கொடுத்து வந்துள்ளார். இந்த விவகாரம் மட்டும் கிடையாது.  மருத்துவ சீட்டுக்கு பணம் வாங்கிய விவகாரம்  என்பது கண்துடைப்பு. இதை தீர விசாரித்தால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்.  1969ல் சாதாரண ஆசிரியராக இருந்த பச்சமுத்து துவக்கப்பள்ளி, பொறியியல் கல்லூரி, நர்சிங், மருத்துவ கல்லூரி என ஆண்டுக்கு ஒன்று என கல்வி நிறுவனங்களைத் தொடங்கி 20 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களைத் தொடங்க அவருக்கு பணம் எங்கிருந்து வந்தது?. எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் பல ஆயிரம் கோடிக்கு மேல் கருப்பு பணம் இருக்கிறது.  அந்தக் கருப்பு பணம் முழுவதும் முறைகேடான வழிகளில் சம்பாதிக்கப்பட்டது. பல  நிறுவனங்கள் பச்சமுத்து பெயரில் இயங்கி வருகின்றன.  அவை கணக்கில் அடங்காமல்  இருக்கின்றன. முறையான வழிகளில் வருமானம் என்றால் மிக குறுகிய காலத்தில் இவ்வளவு சொத்துக்களுக்கும் நிறுவனங்களுக்கும் அதிபதி ஆக முடியுமா? இதில் அரசுக்கு வரி கட்டாமல் ஏய்ப்பு செய்ததும் அடங்கும். அதாவது ஒரு நிறுவனத்தை பல பெயரில் பதிவு செய்து ஒன்றுக்குள் ஒன்று கொடுத்துவாங்குவது போல கணக்குக் காட்டி வரி ஏய்ப்பு செய்திருக்கிறார்.இதில் அதிகாரிகளுக்கும் பங்குண்டு. தான் எதிலுமே மாட்டாமல் இருப்பதற்காகத்தான் மதனை பினாமியாக பயன்படுத்தி வந்துள்ளார்.  தான் செய்யும் பல தில்லுமுல்லு வேலைகளுக்குப் பாதுகாப்புக்காகத்தான் பச்சமுத்து அரசியல் கட்சியை தொடங்க அவற்றிலிருந்து தப்பித்து வருகிறார். எனவே மதன் விவகாரத்தில் நடந்த உண்மைகள் வெளிவந்தால் பல  அதிர்ச்சிகள் வெளிவரும்.” என்ற அதிர்ச்சியை த் தகவலை கொடுத்தனர்.

53288843

இதற்கிடையே எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் முதன்மை வளாகம் 250 ஏக்கர், டெல்லியில் 25 ஏக்கர், அரியானாவில் 55 ஏக்கர், சிக்கிமில் 100 ஏக்கர் பரப்பளவு உள்ளன. அவற்றில் ஏரி புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதும் இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

எனவே காவல் துறை இதை மதன் காணாமல் போன விவகாரமாக பார்க்காமல் தீவீரமாக விசாரித்து உண்மைகளை வெளிக் கொண்டு வரவேண்டும்.

எதையோ மறைக்க நினைத்து இதைச் செய்ய எது எதுவோ வெளி வருகிறதே. இது என்னவோ பிள்ளையார் பிடிக்க குரங்கு ஆனது போல என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

                   -எஸ்.பவித்ரா

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
100%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response