அரசியல்
Now Reading
இளங்கோவன் எடுத்த புதுமுடிவு
0

இளங்கோவன் எடுத்த புதுமுடிவு

by editor sigappunadaJuly 7, 2016

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.  திமுக ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்று  குற்றச்சாட்டு எழுந்தது. காங்கிரஸால்தான் திமுக அதிகளவில் வெற்றி பெற முடிந்தது என்று காங்கிரஸாரும் பதில் கூறி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர்.

ஆனால் தேர்தலுக்கு முன்பே இளங்கோவன் கோஷ்டியை தவிர மற்ற கோஷ்டிகள் எல்லாம் டெல்லியை முகாமிட்டு இளங்கோவனை பதவியிலிருந்து தூக்கிவிட வேண்டும் என்று மல்லுகட்டி நின்றன. ஒரு வழியாக அதற்கு பலனும் கிடைத்தது.

அதனால் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது தலைவர் பதவியை ராஜினாமா செத்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்திப்பதையோ, கருத்து கூறுவதையோ தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், கரூர் பசுபதிபாளையத்தில் நேற்று காலை நடந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வந்தார். அவரை பார்த்ததும், நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கருத்து கேட்க முயன்றனர். அப்போது அவர், ‘பத்திரிகையாளர்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை நான் மவுன விரதம் இருக்கப்போகிறேன்’  என்று கூறினார்.

இதைக் கேட்ட மூத்த பத்ரிகையாளர் ஒருவர், “ பெரியாரின் பேரன் மெளன விரதம் இருக்கிறார். அடுத்து யாரும் தலைவராக வந்துவிடக்கூடாது, தானே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதற்காகவா? ” என்று கேட்க மற்றவர்கள் சிரித்தனர்.

-ஆர்.ஜி.எஸ். படம். எஸ்.சார்லஸ்.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response