சினிமா
Now Reading
சுந்தர் சி. படத்திற்கு வரிவிலக்கு தரமுடியாது -தமிழக அரசு
0

சுந்தர் சி. படத்திற்கு வரிவிலக்கு தரமுடியாது -தமிழக அரசு

by editor sigappunadaJuly 12, 2016

02

நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி. தயாரித்து, நடித்து வெளிவந்துள்ள படம் ‘ முத்தின கத்திரிக்கா’. அந்தப் படத்திற்கு வரி விலக்கு கேட்டு விண்ணப்பித்திருந்தார் சுந்தர் சி.

படத்தை பார்வையிட்ட தமிழக அரசின் தேர்வுக் குழு,  ‘அரசியலையும், அதன் செயல்பாடுகளையும் நகைச்சுவை என்ற பெயரில் அநாகரீகமான முறையில் விமர்சித்துள்ளனர். படத்தின் கருவும், கருத்துக்களும், தமிழ் பண்பாட்டிற்கும், நாகரீகத்திற்கும் உட்பட்டு காட்சிப்படுத்தப்படவில்லை. எனவே கேளிக்கை வரி விலக்கு அளிக்க இப்படம் தகுதியானது அல்ல’ என்று கூறியுள்ளது.

“நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருக்கிறார். தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் விமர்சனம் செய்கிறார். அதனால்  வரிவிலக்கு தரமுடியாது என்று சொல்லியிருக்கலாம். சுந்தர் சி எடுத்த படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் உப்பு சப்பு இல்லாதா காரணங்களை கூறி வரிவிலக்கு அளிக்க  மறுத்துவிட்டது. குஷ்புவின் கணவர் என்பதுதான் காரணமா?. வரி விலக்க அளிக்கப்பட்ட படங்கள் எல்லாம் தமிழ்பண்பாட்டிற்கு உகந்ததாகதான் இருக்கிறதா? இதெல்லாம் சும்மா பேச்சு. சினிமாவில் அரசியல் பார்க்கப்படுவதன் விளைவுதான் இது” என்கின்றனர் சுந்தர் தரப்பினர்.

எப்படியோ முத்தின கத்திரிக்கா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும்., அதுபோல விஷயம் ஒரு நாள் வெளியே தெரிந்துதானே ஆகவேண்டும்.

சரி, இந்த விஷயம் குறித்து குஷ்பு இதுவரை ஒன்றும் சொல்லாமல் இருப்பது ஏன்? என்று கேட்கின்றனர் கோடம்பாக்கத்தில் சிலர்.

-ஆர்.ஜி.எஸ். சுதாகர்

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
100%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response