க்ரைம்
Now Reading
சுவாதி கொலையில் திடீர் திருப்பம்
0

சுவாதி கொலையில் திடீர் திருப்பம்

by editor sigappunadaJuly 12, 2016

swathi_Facebook_380ராம்குமார் கைது செய்யப்பட்டபிறகு சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு உள்ள தொடர்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதற்கிடையே ராம்குமாருக்காக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் தீடீரென்று விலகினார். அதன் பிறகு அந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் சுவாதி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள இராம்குமாரின் பெற்றோர்கள் சட்ட உதவி வேண்டி தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர் சங்கத்தினை தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில்  நேற்று சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர் சங்க செயற்குழு கூட்டம் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் சுவாதி கொலை வழக்கின் விசாரணையை நேர்மையாக நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்திட சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வது எனவும் அப்பாவி இளைஞன் ராம்குமாரை பலிகடாவாக்கும் தமிழக காவல்துறையின் சூழ்ச்சியை முறியடித்திட அவருக்கு சட்டரீதியான உதவிகளை செய்வது எனவும் நடந்த உண்மையை மக்கள் அறியும் வண்ணம் சமூக ஆர்வலர்களை கொண்ட ஒரு உண்மை கண்டறியும் குழுவை அமைத்து விசாரணை நடத்தி மக்கள் முன் அறிக்கை சமர்ப்பிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

 

Ramkumar_2919523fஇக்கூட்டத்தில் இராம்குமாரின் வழக்கறிஞர் இச்சங்கத்தின் பொறுப்பாளர் ஓய்வு பெற்ற நீதிபதி S.P.இராமராஜ் அவர்களோடு இணைந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள 17 பேர் கொண்ட வழக்கறிஞர் குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழு இன்று புழல் மத்திய சிறைக்கு சென்று இராம்குமாரை சந்திப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.இந்த திடீர் திருப்பம் சுவாதி கொலை வழக்கில் என்ன மாற்றத்தை கொண்டு வரப்போகிறது பார்ப்போம்.

-பஷீர்

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
33%
வருத்தம்
0%
கோபம்
33%
சிரிப்பு
33%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response