க்ரைம்
Now Reading
ஒரு குடும்பத்தையே அடித்து உதைத்த போலீஸ்
0

ஒரு குடும்பத்தையே அடித்து உதைத்த போலீஸ்

by editor sigappunadaJuly 13, 2016

1468332467-3645

செங்கத்தில் நகை கடை எதிரில் நகை வாங்குவதில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட வாய் தகராறை விலக்கிவிடுவதாக கூறி அவர்களையும், அவர்களது மகனையும் சேர்த்து போலீசார் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் தோக்கவாடியை சேர்ந்தவர் ராஜா(38), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி உஷா(35). மகன் சூரியா(18). இவர்கள் மூன்று பேரும் நெருங்கிய உறவினர் திருமணத்துக்காக நகை வாங்க திங்கள் கிழமை மதியம் செங்கம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நகை கடைக்கு வந்தனர். அப்போது நகையை தேர்வு செய்வதில் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இருவரும் நகைக்கடை வெளியே நின்றபடி நடுரோட்டில் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த செங்கம் போலீஸ்காரர்கள் நம்வாழ்வார், முருகன், விஜயகுமார் ஆகியோர் ராஜா மற்றும் அவரது மனைவியிடம், ‘ஏன் நடுரோட்டில் நின்று சண்டை போட்டு கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டனர்.

Daily_News_344463586808

அதற்கு இருவரும், ‘இது எங்கள் வீட்டுப்பிரச்னை. நாங்கள் சண்டை போட்டுக் கொள்வோம். சேர்ந்துகொள்வோம். நீங்கள் ஏன் இதை கேட்கிறீர்கள்?’ என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார், ‘எங்களிடமே திமிர் பேச்சா?’ என்று கேட்டபடி கணவன், மனைவி, மகன் என மூவரையும் லத்தியால் சரமாரியாக தாக்கினர். ஒரு போலீஸ்காரர் பூட்ஸ் காலால் சரமாரியாக எட்டிஎட்டி உதைத்தார். போலீசாரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மூவரும் நடுரோட்டில் தலைதெறிக்க ஓடினர். அப்போதும் விடாமல் போலீசார் 3 பேரும் சேர்ந்து ராஜா, அவரது மனைவி உஷா, மகன் சூரியா ஆகியோரை சரமாரியாக அடித்து துைவத்தெடுத்தனர். இதனால் அப்பகுதியில் கூட்டம் கூடியது. அவர்கள் போலீசாரை நோக்கி, ‘ஏன் அவர்களை தாக்குகிறீர்கள்?’ என்று தட்டிக்கேட்டதற்கு அவர்களையும் மிரட்டினர். சுமார் 15 நிமிடத்துக்கும் மேல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை ரவுண்டு கட்டி போலீசார் தாக்கியதில் அவர்கள் மயங்கி சரிந்தனர்.

பின்னர் காயங்களுடன் கிடந்த 3 பேரையும் மீட்ட பொதுமக்கள் அவர்களை சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுபற்றி செங்கம் இன்ஸ்பெக்டருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து செங்கம் இன்ஸ்பெக்டர் பழனி, சப்-இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களிடம் விசாரித்து அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்தனர். ஆயுதப்படைக்கு மாற்றம்: இதற்கிடையே திருவண்ணாமலை எஸ்பி பொன்னியின் பரிந்துரையின் பேரில் 3 போலீசாரையும் வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றி டிஐஜி தமிழ்ச்சந்திரன் உத்தரவிட்டார்.

பொதுமக்கள் மறியல்

தகவல் அறிந்த தோக்கவாடி பகுதி மக்கள் செங்கம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை இன்ஸ்பெக்டர் சமாதானப்படுத்தினார். இதை தொடர்ந்து தம்பதியை தாக்கிய 3 போலீசாரையும் கைது செய்ய வலியுறுத்தி திருவண்ணாமலை-பெங்களூர் நெடுஞ்சாலையில் அன்றுஇரவு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏடிஎஸ்பி கணேசன், டிஎஸ்பி சாஜிதா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், போலீசாரின் சமாதானத்தை பொதுமக்கள் ஏற்காததால் செங்கம் பகுதியில்  தொடர்ந்து பதற்றம் நிலவியது.

– எஸ். தேவராஜ்

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
100%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response