க்ரைம்
Now Reading
குடும்ப விபச்சாரம், சீரழியும் சென்னை
0

குடும்ப விபச்சாரம், சீரழியும் சென்னை

by editor sigappunadaAugust 1, 2016

prostitution

முன்பெல்லாம் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் எளிதில் கண்டறிந்து விடுவார்கள். ஆனால், இப்போது விபச்சாரம் நடப்பதை கூட ஹைடெக்காக நடத்தத் தொடங்கி விட்டனர் பங்களாக்களில் விபச்சாரம் நடந்தால் அந்தத் தகவல் போலீசாருக்கு எளிதில் கிடைத்துவிடும் என்பதால்.  மசாஜ் சென்டர் ,பியூட்டி பார்லர் போன்ற இடங்கள் பாலியல் தொழில்களின் புகலிடமாக  மாறி இருக்கின்றன. இதையும் காவல்துறையினர் மோப்பம் பிடித்து கைது செய்து வந்தனர்.

இப்போது மேலும் ஒரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் குடும்ப பெண்கள், குடும்பத்தில் இருந்துகொண்டே விபச்சாரத்தில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது. அதேபோல ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு கல்லூரிப்பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலும் நம்மை நிலைகுலைய வைக்கிறது.

images

சமீபத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குடும்ப பெண்கள் பலர், வீடுகளை விபச்சார விடுதிகளாக பயன்படுத்தி பணம் சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குடும்பப் பெண்கள் பலரும் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய கலாச்சார சீரழிவில் ஈடுபடுவதால் உயிரிழக்கும் ஆபத்தும் இருக்கிறது.

ஆடம்பர வாழ்க்கை மற்றும் பணத்திற்கு ஆசைப்பட்டு சிக்கனமாக இருக்கச் சொல்லும் கணவரின் பேச்சைக் கேட்காமல், அக்கம் பக்கத்தவர்களைப் பார்த்து தாமும் அதைப்போல செய்யவேண்டும் என்று வாழ்க்கையை பலி கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வருகிறது.

சொகுசான வாழ்க்கை, கைகளில் கரன்சி, விதவிதமான உடைகள், கூடவே உல்லாசம் என சைத்தான்கள் ஓதும் வேதத்தைக் கேட்டு படுகுழியில் விழுகின்றனர் குடும்பப் பெண்கள். வாழ்க்கைப் பறிபோகும் பணத்திற்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைப்பதோடு உயிரை இழக்கும் சூழலும் ஏற்படுகிறது.

இதற்கு உதாரணமே கடந்த சிலவருடங்களுக்கு முன்பு சென்னை எம்.ஜி.ஆர் நகர்  பைனான்சியர் லோகநாதன் என்பவரின் மனைவி ரஞ்சிதம் கொலை. அதேபோல ஆவடி திருமுல்லை வாயலில் நடைபெற்ற பெண்ணின் கொலை.. இந்த இரண்டு கொலைகளுமே கணவர், குழந்தைகளோடு குடும்பம் நடத்தும் பெண்கள் சறுக்கியதாலேயே உயிரிழந்துள்ளனர்.

பணத்திற்கு ஆசைப்பட்டு தனது வீட்டை விபசார விடுதியாக மாற்றும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள் என்று போலீசார் கவலை தெரிவிக்கின்றனர்.

போலீஸார் அதிரடி நடவடிக்கை இந்த இரண்டு கொலைச் சம்பவங்களுக்குப் பின்னர் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு குடும்பப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துபவர்களை கைது செய்தார்கள். அதன்பிறகு சற்று குறைந்து காணப்பட்ட விபச்சாரம் தற்போது மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது என்கின்றனர் போலீசார்.

சென்னையில், வீட்டில் வைத்து விபசாரத்தில் ஈடுபடுவது நூதன கலாச்சாரமாக மாறியுள்ளது. எனவே அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள், பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது. யார்-யார் வந்து செல்கிறார்கள் என்பதையும் கவனிக்காமல் இருப்பதும் வசதியாக போய்விடுகிறது.

இண்டர்நெட் மூலமாக இளைஞர்களை கவர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும், வீடுகளிலும் விபசாரத்தில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மற்றும் குடும்ப பெண்கள் தங்களது குடும்பத்தினருக்கு தெரிந்தும், தெரியாமலும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகின்றனர்.

அதேபோல குடும்பத்தில் இருக்கும் பெண்களில் சிலர் வெளியில் செல்வதுபோல விபச்சார நிலையங்களுக்குச் சென்றுவிட்டு, கைநிறைய பணத்துடன் வீட்டுக்கு திரும்புகிறார்கள் என்றும் பிடிப்பட்ட புரோக்கர்கள் கூறுகிறார்கள்.

இதேபோல வறுமையில் வாடும் குடும்ப பெண்களை குறி வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி விபச்சார புதைக்குழிக்குள் தள்ளிவிடும் கும்பலும் உண்டு.

ஒரு முறை தவறு செய்துவிட்டு அதிலிருந்து மீள முடியாமல் மீண்டும்  மீண்டும் அதே தொழிலில் ஈடுபடுகின்ற பெண்களும் உண்டு.

சினிமா ஆசை காட்டி விபச்சாரத்தில் தள்ளுபவர்களும் உண்டு. பெண்களுக்குத் தெரியாமல் அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி விபச்சாரத்தில் தள்ளுவதும் உண்டு.

இவையெல்லாம் போலீசாருக்குத் தெரியாமல் இல்லை, மாமூல் வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதும் விபச்சாரத்தை ஒழிக்க முடியாமல் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக சமூக ஆர்வலர்களால் கூறப்படுகிறது.

இப்படிப் பல காரணங்கள் இருந்தாலும் குடும்ப பெண்கள்  நேர்மையாக உழைத்து கிடைக்கும் வருமானத்தில் போதுமென்ற மனதுடன்  இருந்தால் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக வாழலாம் -வாழவேண்டும்.

இந்தக் கலாச்சாரசீரழிவை  காவல்துறை இரும்புகரம் கொண்டு ஒடுக்க முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது. அதேநேரம் காவல்துறையும் புனிதமாக இருக்கவேண்டும்.

-சுதன்

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
50%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response