அரசியல்
Now Reading
என்.எல்.சி பெயர் மாற்றம்- வேல்முருகன் எதிர்ப்பு
0

என்.எல்.சி பெயர் மாற்றம்- வேல்முருகன் எதிர்ப்பு

by editor sigappunadaAugust 17, 2016

IMG_5076

கடலுார் மாவட்டம், நெய்வேலியில் காமராஜர் ஆட்சியில் துவங்கப்பட்ட, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.), தற்போது வைர விழாவை கொண்டாடி வருகிறது.

நெய்வேலி மட்டுமின்றி, ஜெயங்கொண்டம், சீர்காழி, துாத்துக்குடி என தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், ராஜஸ்தான், ஒடிசா, உத்தர பிரதேசம், கர்நாடகா என பிற மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஆகிய இடங்களிலும், பழுப்பு நிலக்கரி மற்றும் மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்கிறது.

இதன் காரணமாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்ற பெயரில் இதுவரை செயல்பட்டு வந்தது, இனி, ‘என்.எல்.சி., இந்தியா லிமிடெட்’ என்ற பெயரில் செயல்படும் என, மத்திய அரசு  சமீபத்தில் அறிவித்தது.  இதற்கு தமிழகத்தில்  எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் இதுகுறித்து கூறுகையில், என்.எல்.சி.நிர்வாகத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சி” என்று குற்றம் சாட்டினார்.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response