விளையாட்டு
Now Reading
ஒலிம்பிக் பாட்மின்டன்: இந்தியாவிற்கு அடுத்த பதக்கம் உறுதியானது!
0

ஒலிம்பிக் பாட்மின்டன்: இந்தியாவிற்கு அடுத்த பதக்கம் உறுதியானது!

by Sub EditorAugust 19, 2016

பாட்மின்டன் அரையிறுதிபோட்டியில் இந்திய வீராங்கனை சிந்து வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். இதனையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு அடுத்த பதக்கம் உறுதியானது.

பிரேசிலின் ரியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான பாட்மின்டனில் இந்திய வீராங்கனை சிந்து, காலியுறுதியில் சீனாவின் இகான் வாங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை நொசாம்பி ஓக்குஹாரா எதிர்கொண்டார்.

அரையிறுதியில் துவக்கம் முதலே முன்னிலை பெற்று வந்த சிந்து, இப்போட்டியில் முதல் செட்டை 21-19 என்ற புள்ளி கணக்கில் கை பற்றிய சிந்து, 2வது செட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 21-10 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 2-0 என்ற செட் கணக்கில் நொசாம்பியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். பைனலில் சிந்து உலகின் ‛நம்பர் 1′ வீராங்கனையான ஸ்பெயின் நாட்டின் கரோலினா மெரினை எதிர்கொள்கிறார்.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
100%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response