பேட்டி
Now Reading
தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவிக்கு போட்டியிட போகிறேன் – நடிகர் எஸ்.வி. சேகர் பேட்டி.
0

தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவிக்கு போட்டியிட போகிறேன் – நடிகர் எஸ்.வி. சேகர் பேட்டி.

by editor sigappunadaAugust 19, 2016

கடந்தவாரம் ஒரு வார இதழுக்கு நடிகர் விஷால் அளித்த பேட்டியில், ‘தயாரிப்பாளர் சங்கம் திருட்டு சிடியை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. சங்கத்தில் என்ன நடக்கிறது என தெரியவில்லை. நடிகர் சங்கத்தை போல் தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்ற வேண்டும்’ என அவர் கருத்து தெரிவித்திருந்தார். இந்தநிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அவசர  கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில்,
“தனது பேட்டிக்கு ஒரு வாரத்துக்குள் விஷால் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தீபாவளி வெளியீடாக அவர் அறிவித்துள்ள கத்தி சண்டை படம் தவிர்த்து அவர் நடிக்கும் மற்ற எந்த தமிழ் திரைப்படங்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தமிழ்பட தயாரிப்பாளர்களும் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

விஷால் இதற்கு, ‘தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் என்னிடம் யாரும் இதுவரை பேசவில்லை. இதுகுறித்து அவர்கள் என்னிடம் கேட்டாலோ அல்லது கடிதம் அனுப்பினாலோ எனது தரப்பு விளக்கத்தை நான் தெரிவிப்பேன்’ என்று பதிலளித்தார்.

இந்தநிலையில் நடிகர் சங்கத்தில் டிரஸ்டியாக இருக்கும் நடிகர் எஸ்.வி.சேகரிடம் இது குறித்து ஒரு மினி பேட்டி.

IMG_9306

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கம் பற்றி கூறிய கருத்து குறித்து?

விஷால் கூறியதில் என்ன தவறு இருக்கிறது. பி.வி.ஆர். திருட்டு விசிடி எடுக்கப்படுவதாக விஷால் ஆதாரத்தோடு குற்றம்சாட்டினார். ஆனால்; அதற்கு இன்றுவரை பதில் கூறவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தயாரிப்பாளர் சங்கம் என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள்?

படம் வெளியான மூன்றே நாளில் கேபிளில் படம் போடுகிறார்கள். இதற்கு தயாரிப்பாளர் சங்கம்தானே நடவடிக்கை எடுக்க வேண்டும், எடுக்க வில்லையே.விஷாலும். நடிகர் சங்கமும் தானே நடவடிக்கை எடுத்தார்கள்.

தயாரிப்பாளர் சங்கம் எந்தச் சின்ன படங்களுக்காவது உதவி செய்திருக்கிறார்களா? இல்லையே……

இந்த விஷயம் ஒன்றுமில்லை என்கிறீர்களா?

தேவையில்லாமல் இந்த விஷயத்தை பெரிதாக்குகிறார்கள். தயாரிப்பாளர் சங்கம் பெப்சி கூட சேர்ந்துகிட்டு செய்யும் கூத்துதான் இது.

இதற்கு தீர்வு என்ன என்று நினைக்கிறீர்கள்?

வரும் ஜனவரியில் நடைபெற இருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் உபதலைவர் அல்லது செயலாளர் பதவிக்கு போட்டியிட போகிறேன். நானும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் போட்டியிடுவேன். அதன் பிறகு பாருங்கள்.

பேட்டி; ஆர்.ஜி.எஸ். படம். எஸ். சார்லஸ்

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response