க்ரைம்
Now Reading
மனைவி கோபித்துக் கொண்டு போனதால் பிள்ளைகளை கொலை செய்த தந்தை
0

மனைவி கோபித்துக் கொண்டு போனதால் பிள்ளைகளை கொலை செய்த தந்தை

by editor sigappunadaAugust 19, 2016

நெல்லை தருவை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கு மேனகா என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர்.

1471574902-80851123434

ராஜசேகருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சண்டை போடுவாராம். அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும் என கூறப்படுகிறது. இதே நிலை தொடர்ந்ததால், கணவரிடம் கோபித்து கொண்டு மனைவி மேனகா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். வழக்கம் போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்த ராஜசேகர், மனைவி வீட்டில் இல்லாததால் கோபமானார், கோபத்தில் தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துள்ளார்.

அப்போதும் மூத்த பெண் விஷம் குடிக்க மறுத்துள்ளார், அதனால், ராஜசேகர், அப்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். குடி போதை தெளிந்த பிறகுதான், அவர் செய்த தவறை உணர்ந்துள்ளார். பின்னர், துக்கம் தாங்காமல் தற்கொலை செய்ய முடிவு செய்த ராஜசேகர், தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
100%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்