உலகம்
Now Reading
செவாலியே விருதுபெரும் இரண்டாவது தமிழர், ஐந்தாவது கலைஞர் கமல்
0

செவாலியே விருதுபெரும் இரண்டாவது தமிழர், ஐந்தாவது கலைஞர் கமல்

by editor sigappunadaAugust 22, 2016

968863420Kamal-Hassan2344

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு  செவாலியர் விருது வழங்கப்பட்ட பிறகு செவாலியர் சிவாஜி கணேசன் என்றழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு மிக உயரிய விருது அது.. “நடிப்பின் பல்கலைக்கழகமான  சிவாஜிக்கு பிறகு செவாலியே விருது பெரும் இரண்டாவது தமிழர் கமல்ஹாசன் என்பது பெருமையே. ஐந்தாவது சினிமா கலைஞர் கமல்ஹாசன் என்பதும் குறிப்பிடதக்கது.  இந்த விருது கமலுக்கு மிக பொருத்தமே.

பிரான்ஸ் கலைத்துறை அமைச்சகத்தின் சார்பில், மிக உயரிய விருதான ‘செவாலியர்’ விருது வழங்கப்படுகிறது.

இந்தியாவில் பிரான்ஸ் ஆட்சி நடைபெற்றது முதல் இதுவரை 26 நபர்களுக்கு மட்டுமே இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.

அதுவும் கலைத்துறையில் ஐந்துபேர் மட்டுமே இந்த விருதை பெற்றிருக்கிறார்கள்.  கலைத்துறையில் முதல் ‘செவாலியர்’ விருதைப் பெற்றவர் இயக்குநர் சத்யஜித்ரே (1987). அதன்பிறகு சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்டது. கலைத்துறையில் இவ்விருது பெற்ற முதல் நபர் சிவாஜி, தமிழ்நாட்டில் இவ்விருது பெற்ற முதல் நபர் சிவாஜி என்ற பெருமை தமிழ்நாட்டிற்கு கிடைத்தது. அதன் பிறகு பல வருடங்கள் கழித்து 2007இல் அமிதாப் பச்சனுக்கும், 2014இல் ஷாருக்கானுக்கும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

NTLRG_150928134958000000

விருது பெற்றது குறித்து பேசிய கமல் ‘இனி நான் செய்ய வேண்டிய வேலைகளுக்கான ஊக்கியாக இந்த விருதைப் பார்க்கிறேன். என் முன்னோர்கள் இயக்குநர் சத்யஜித்ரே, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வழியில் இந்த விருது எனக்கு கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த பெருமையைக் கண்டு ரசித்து ஆனந்தப்பட என் பெற்றோர்கள் இல்லை எனினும், உறவுகளும், நண்பர்களும் சூழ நின்று கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். இந்தியா முழுவதுமாக சேர்ந்து கமலை வாழ்த்தி வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கம், ‘கமலுக்காக பாராட்டு விழா எடுக்கப்போகிறோம்’ என வேலையைத் தொடங்கிவிட்டது.

நடிப்பின் இலக்கணம் கமலுக்கு நம்முடைய வாழ்த்துக்கள்.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்