க்ரைம்
Now Reading
போலீசாரின் ஜீப்பை ஓட்டிய போதை ஆசாமி -சென்னையில் பரபரப்பு
0

போலீசாரின் ஜீப்பை ஓட்டிய போதை ஆசாமி -சென்னையில் பரபரப்பு

by editor sigappunadaAugust 22, 2016

சென்னை திருவெற்றியூரில் நடந்த ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ori_pc_36378-img-2016-05-28-1464421263-police-jeep23

சென்னை திருவெற்றியூரில் நேற்று மதியம் மூன்று மணியளவில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வந்த ஜீப் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார்கள்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு போதை ஆசாமி,  போலீசாருக்குத் ஜீப்பை ஓட்டி சென்று விட்டார். அவர் குடிபோதையில் இருந்ததால், சாலையில் தாறுமாறாக ஜீப்பை ஓட்டிச் சென்றார்.  இதைக் கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்து அவர்களை பின் தொடர்ந்தனர். ஜீப் தாறுமாறாக வருவதைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். அதன்பின், சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி ஜீப் நின்றுவிட்டது.
உடனே அங்கிருந்த பொதுமக்கள், அந்த போதை ஆசாமியை பிடித்தனர். அதற்குள், ஜீப்பை துரத்தியபடி போக்குவரத்து போலீசாரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
விசாரணையில், வண்டியை ஓட்டி சென்றவர் புருஷோத்தமன்(36) என்பது தெரியவந்தது. மேலும், அவர் திருவெற்றியூர் போக்குவரத்து போலீசில் காவலராக பணியாற்றியவர் என்பதும், பணியின்போது மது போதையில் இருந்ததால் கடந்த  எட்டு மாதங்களாக பணி இடைநீக்கம் செய்யபட்டிருந்தவர் என்பதும் தெரிய வந்தது.
போதை ஆசாமி, போலீசாரின் ஜீப்பை ஓட்டிச்சென்ற சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response