உலகம்
Now Reading
ரவுடிகள்-போலீஸ் துப்பாக்கி மோதல், சினிமா காட்சி போல் பரபரப்பு
0

ரவுடிகள்-போலீஸ் துப்பாக்கி மோதல், சினிமா காட்சி போல் பரபரப்பு

by editor sigappunadaAugust 22, 2016

மாபியா கும்பலின் அட்டகாசத்தால் தலைநகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மிகுந்த பாதுகாப்பு நிறைந்த தலைநகர் டெல்லியில் நடந்த இந்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

147182401343543354

தலைமறைவு மாஃபியா குழுக்களின் ஆதிக்கம் மும்பையிலும் டெல்லியிலும் உள்ளன. பாலிவுட் சினிமாவின் தலைமையகமான மும்பையில் மாஃபியா குழுக்கள் தனி அரசாங்கத்தையே நடத்துகிறார்கள். டெல்லியிலும் அதேநிலைதான்.

இந்நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் போலீஸ் மற்றும் தாதாக்களுக்கு இடையே பல மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. புதுடெல்லியின் ரோகிணி பகுதியில், வர்த்தகர் ஒருவரை மிரட்டிப் பணம்பறித்த கும்பல் ஒன்று அவரிடமிருந்து பணத்தை பெற்றுக் கொள்வதற்காக அந்தப் பகுதிக்கு வந்தபோது மறைந்திருந்த போலீஸாருக்கும் குண்டர்களுக்கும் மோதல் வெடித்தது.

ஐந்து ரவுடிகளை சுற்றி வளைத்த போலீஸார் அவர்களை சரணடையுமாறு கோரிக்கை வைக்க அவர்களோ, துப்பாக்கிகளை எடுத்து சுடத் தொடங்கினார்கள். ஏற்கனவே சூழ்ந்திருந்த காவலர்கள் அவர்கள்மீது துப்பாக்கியால் சுட, சுமார் இரண்டு மணிநேரம் போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.

பின்னர், ரவுடிகளில் ஐந்து பேரை சுட்டு காயமடையச் செய்த காவலர்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். மற்றவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

வணிகரிடம் நடந்த பணப்பறிப்பு முயற்சி தோல்வியில் முடிய, சுமார் இரண்டு மணிநேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டை மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response