அரசியல்
Now Reading
’கமலை தமிழக அரசு ஏன் பாராட்டவில்லை’ –சர்ச்சையை கிளப்பும் சீமான்
0

’கமலை தமிழக அரசு ஏன் பாராட்டவில்லை’ –சர்ச்சையை கிளப்பும் சீமான்

by editor sigappunadaAugust 23, 2016
சீமான்
தமிழகத்தில் நடிகர் திலகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே வருது வழங்கப்படுவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் உட்பட நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பில் இருந்தும்   கமலை வாழ்த்தி வருகின்றனர்.
ஆனால், இதுவரை தமிழக அரசு சார்பில் இருந்து எந்தவிதமான அறிவிப்புகளோ, வாழ்த்துச் செய்திகளோ வெளியிடப்படவில்லை. இதற்கு இயக்குநரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 கமல்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் சீமான், செவாலியர் விருதுக்காக திரையுலகமே அவரைச் சந்தித்துப் பாராட்டுகையில், தமிழக அரசிடம் இருந்து மனதார ஒரு வாழ்த்துச் செய்தியோ, பரிசுகளையோ ஏன் அறிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 மேலும் அவர், சமூகப் பற்றுள்ள கலைஞன் கமல்ஹாசன் என்றும் எய்ட்ஸ் விழிப்பு உணர்வுக்காக அரசுக்கு இணையாக அவர் பங்காற்றியிருக்கிறார். பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உடை, காலணி வாங்கித் தருகிறார். ஏழை மக்களுக்கு அரிசி வாங்கித் தருகிறார். பொறுப்புள்ள ஒரு கலைஞனை அங்கீகரிப்பது தேசத்தின் பெருமை என்றும்  தெரிவித்துள்ளார்.
இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response