உலகம்
Now Reading
பெட்ரோல் தேவையில்லை- தண்ணீரில் ஓடும் பைக்
0

பெட்ரோல் தேவையில்லை- தண்ணீரில் ஓடும் பைக்

by editor sigappunadaAugust 23, 2016

பெட்ரோலில் ஓடும் மோட்டார் சைக்கிள் கேள்விபட்டிருப்பீர்கள். தண்ணீரில் ஓடும் பைக்கை கேள்விபட்டிருக்கிறீர்களா? இதோ ஒருவர் கண்டுபிடித்திருக்கிறார்.

ஒரு லிட்டர் வெறும் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் தூரத்துக்கு தங்குதடையின்றி செல்லகூடிய அற்புதமான மோட்டார் சைக்கிளை பிரேசில் நாட்டிலுள்ள சாவ் பாலோ நகரை சேர்ந்த ரிக்கேர்டோ ஆஸேவெடோ என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

12323455

இந்த மோட்டார் சைக்கிள் சாதாரண தண்ணீரில் ஓடுவதோடு, பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களைப்போல் நச்சுத்தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு போன்ற வேதிப் பொருட்களை வெளியேற்றுவதில்லை. மாறாக, வெறும் நீராவியை மட்டுமே வெளியேற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘டி பவர் ஹெச்20’ (T Power H20) என இந்த புதிய மோட்டார் சைக்கிளுக்கு பெயரிட்டுள்ள ரிக்கேர்டோ ஆஸேவெடோ, இதன் செயல்திறன் குறித்த விளக்கத்தையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்த மோட்டார் சைக்கிளில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பேட்டரியில் இருந்து கொள்கலத்தில் ஊற்றப்பட்ட தண்ணீரில் பாய்ச்சப்படும் மின்சாரமானது, அந்த தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் பொதிந்திருக்கும் ஹைட்ரஜன் எனப்படும் நீரியத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதன் வாயிலாக கிடைக்கும் உந்துசக்தி மூலம் காற்றை கிழித்துக் கொண்டு பறக்கும் இந்த மோட்டார் சைக்கிள், ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் வரை செல்லும் என்பதை ரிக்கேர்டோ ஆஸேவெடோ ஆதாரப்பூர்வமாக நிரூபித்துக் காட்டியுள்ளார். அவருக்குப் பாராட்டுக்கள் குவிகின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுகிறது இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கும் இந்தக் காலகட்டத்தில் மாசுபடுத்தாத, செலவில்லாத இந்த பயணம் வெகுவாக பயன்படும் என்பது உண்மைதானே!.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response