க்ரைம்
Now Reading
போதை பொருள் பறிமுதல் செய்தது கஸ்டம்ஸ் அதிகாரிகள்தானா?
0

போதை பொருள் பறிமுதல் செய்தது கஸ்டம்ஸ் அதிகாரிகள்தானா?

by editor sigappunadaAugust 24, 2016

காரைக்குடி அருகே தனியார் லாட்ஜில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து தேவக்கோட்டை செல்லும் ரோட்டில் சங்கரபதிகோட்டை அருகே தனியார் லாட்ஜ் உள்ளது. இந்த லாட்ஜில் நேற்று முன் தினம் மதியம் அமராவதிப்புதூர் சமத்துவபுரத்தை சேர்ந்த நபர் ஒருவர் அறை எடுத்து தங்கினார்.

அஃப்ச்ஃபச்ட்ட்ச்ச்

இவர் தங்கிய அறையில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக ராமநாதபுரம் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் 4 பேர் நேற்று இரவு 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை லாட்ஜில் உள்ள அறையில் அதிரடி சோதனை நடத்தி 2 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ. 2 கோடி. போதைப்பொருளை பறிமுதல் செய்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் தேவகோட்டை ராம்நகர் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நின்றுள்ளனர். அப்போது அங்கு மப்டியில் வந்த போலீஸ்காரர் ஒருவர், இவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். கஸ்டம்ஸ் அதிகாரிகள் என கூறியவுடன் போலீஸ்காரர் சென்று விட்டார். பின்னர் கஸ்டம்ஸ் அதிகாரிகள் காரைக்குடி நோக்கி சென்றனர்.

இவர்கள் உண்மையான கஸ்டம்ஸ் அதிகாரிகளா அல்லது போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த தகவல் கிடைத்து கஸ்டம்ஸ் அதிகாரிகள் போல் நடித்து போதைப்பொருளை பறிமுதல் செய்தார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முக்கியமாக, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளுக்கும், சர்வதேச கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. தப்பிச் சென்றவரை பிடித்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும். சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் போதைப்பொருள் கடத்தி வரும் குருவிகளை சுங்க அதிகாரிகள் கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response