சினிமா
Now Reading
விஜய்க்கு வில்லனாக ஆர்.கே.சுரேஷ்!
0

விஜய்க்கு வில்லனாக ஆர்.கே.சுரேஷ்!

by Sub EditorSeptember 2, 2016

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், சதீஷ் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வில்லனாக ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, ஹரிஷ் உத்தமன், கன்னட நடிகர் சரத் லோகித்சவா என பலபேர் நடித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய வில்லனாக ஆர்.கே.சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர்.கே.சுரேஷ், அதைத் தொடர்ந்து ‘மருது’ படத்திலும் வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது விஜய்க்கு வில்லனாக இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவில் படமாக்கவிருக்கின்றனர்.

‘விஜய்60’ படத்தின் 70 சதவிகித படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டது. இப்படத்தின் தலைப்பை வருகிற தீபாவளிக்கு வெளியிடவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response