க்ரைம்
Now Reading
178 வது வார்டு அதிமுக கவுன்சிலர் மூர்த்தியின் அராஜகம்
0

178 வது வார்டு அதிமுக கவுன்சிலர் மூர்த்தியின் அராஜகம்

by editor sigappunadaSeptember 2, 2016

 

மூர்த்தி

மூர்த்தி

வேளச்சேரி 178 வார்டு அதிமுக கவுன்சிலராக இருப்பவர் எம்.ஏ.மூர்த்தி. இவருக்கு அராஜக மூர்த்தி என்ற பெயரும் உண்டு. கட்டபஞ்சாயத்து, மாமூல் வசூல் செய்வது, அடாவடி செய்து பணம் பிடுங்குவது என இவரது அட்டகாசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகர் என்று அப்பகுதி மக்கள் இவர் மீது மாறி மாறி குற்றம்சாட்டுகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வேளச்சேரியின் கடைத்தெருவில் உள்ள ஒரு கடையில் வாசலில் பள்ளம் தோண்டி அந்த கடைக்காரரை பழிவாங்கியிருக்கிறார். அந்தக் கடைக்காரர் மாமூல் தரவில்லை என்பதுதான் காரணமாம்.

இப்படி குற்றச்சாட்டு இவர் மீது வருவது புதிதல்ல. கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு துணிக்கடையில் தனது சகாக்களுடன் துணி வாங்குவது போல சென்று மாமூல் கேட்டு மிரட்டியிருக்கிறார் மூர்த்தி. தரமறுத்த கடைக்காரரை ஓங்கி அடித்ததுடன் லேப் டாப்பையும் சேதப்படுத்தியிருக்கிறார்.

இந்தக் காட்சி அந்தக் கடையிலிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது அப்போது. ஆனாலும்; அவர் மீது அதிமுக தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவரது அட்டூழியங்கள் தொடர்ந்து அதிகரித்து  வருகிறது என்று அப்பகுதி வியாபாரிகள் கண்ணீர் மல்க கூறுகின்றனர். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றும் கோரிக்கையும் வைக்கின்றனர் அவர்கள்.

மூர்த்தியின் அராஜகம் பற்றி 178 வது வார்டை சேர்ந்த ஒருவர் நம்மிடம், “ இந்த பகுதிக்கு இவர் வார்டு கவுன்சிலராக தேர்ந்தேடுக்கப்பட்டதிலிருந்து இவரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  புதிதாக ஒரு கட்டிடம் கட்டினால் போதும். உடனே வசூலுக்கு வந்துவிடுவார். பணத்தை வாங்காமல் போக மாட்டார்.

வடிவேலு

வடிவேலு

நகராட்சி வார்டு மக்களின் நற்பணிகளுக்காக ஒதுக்கும் தொகையை தனது சொந்த பகைக்காக வீணடிக்கிறார். அதாவது ஒரு கடைக்காரரிடம் மாமூல் கேட்பது, கொடுக்கவில்லை என்றால், அவரை பழிவாங்க கடையை மறைக்கும் விதமாக கடைக்கு முன்பு ஏதாவது  கட்டிடம் கட்டி தொல்லை கொடுப்பது, ஆட்களை ஏவி வியாபாரத்தை கெடுப்பது, வாடிக்கையாளர்போல சென்று பிரச்னை செய்து அடித்து நொறுக்குவது இதெல்லாம் இவருக்கு கைவந்த கலை.

அதுமட்டுமல்ல, விஜயநகரில் இருந்த மீன் மார்க்கெட்டை காலி செய்ய அந்த பில்டிங் ஓனரிடம் ஒரு பெரும் தொகையை கறந்துவிட்டார்.  சரவணா ஸ்டோர்ஸ் கடையில் இங்கே பஸ்டாண்ட் வருகிறது என்று கூறி ஐந்து லட்சத்தை வாங்கியிருக்கிறார். ஜுனியர் குப்பண்ணா என்ற ஓட்டலில் மிரட்டி மாமூல் வாங்கியிருக்கிறார்.  வேளச்சேரியில் ஒருவர் வந்து இடம் வாங்கிவிட்டால் இவருக்கு கட்டிங் கொடுக்காமல்  எந்தவொரு காரியத்தையும் செய்யமுடியாது.

ரியல் எஸ்டேட் என்ற பெயரில் மற்றவர்களின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்குவது, அடித்து பிடுங்குவது, போலி பத்திரம் தயார் செய்து இடத்தை  அபகரிப்பது என இவரின் நில அபகரிப்பு லீலைகளுக்கு பஞ்சமில்லை. இப்படி இவரால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

இவர் மீது காவல்நிலையங்களில் கட்டபஞ்சாயத்து, கொலைமுயற்சி, மிரட்டல், கட்டாய வசூல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அடுத்த நாளே  அந்தப் புகார் மூர்த்தி கைக்கு வந்து விடுகிறது. கமிஷனர் ஆபிஸில் கொடுக்கும் புகார் கூட இவர் கைக்கு வந்து விடுகிறது. புகார் கொடுத்தவரிடமே அந்தப் புகாரைக் காட்டி, ‘இங்கு மட்டுமல்ல கார்டனுக்கே புகார் அனுப்பினாலும், என் கைக்கு வந்துவிடும். அங்கும்  எனக்கு ஆள் இருக்கிறது. எனவே என்னை ஒன்றும் செய்ய முடியாது’ என்று மிரட்டுவார் மூர்த்தி. இதனால் இவருக்கு ‘கார்டன் மூர்த்தி’ என்றும் ஒரு பெயர் உண்டு.

இவரின் அராஜகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கூறுகிறார் அவர். அதே குற்றச்சாட்டுகளை ஆமோதிக்கின்றனர் அப்பகுதிவாசிகளும்.

“ இவர் கட்சியில் வருவதற்கும், வளர்வதற்கும் காரணமாக இருந்தவர் முன்னாள் அதிமுக வட்டச் செயலாளர் வடிவேல். ஏறிவந்த ஏணியை எட்டி மிதித்தது போல, வளர்த்துவிட்ட வடிவேலுவையே ஒருகட்டத்தில் மிரட்டத் தொடங்கி விட்டார். இவரின் அராஜக செயல்களை கண்டித்ததால் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார். மூர்த்தியால் வெட்டப்பட்டு வீட்டில் முடங்கி கிடந்த வடிவேலுவிடம், ‘குடும்பத்தோடு காலி செய்து விடுவேன்’ என்று அவருக்கு மன ரீதியாக  தொடர்ந்து டார்ச்சர் கொடுத்தார்.

வடிவேலுவின் மனைவி

வடிவேலுவின் மனைவி

அதனால் வடிவேலு மனம் நொந்து இறந்தே போய் சேர்ந்து விட்டார்.  வடிவேலுவை வெட்டிய வழக்கும், கொலை வழக்கும் இவர் மீது இன்னமும் இருக்கிறது. அந்த வழக்கை வாபஸ் வாங்கு, இல்லையென்றால் குடும்பத்தையே காலி செய்து விடுவேன் என்று வடிவேலு மகனிடமும் புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுகிறார் என்று கூறி கண்ணீர் விட்டு அழுகிறார் வடிவேலு மனைவி.

மேலும், “ நான் ஒருத்தி அமங்கலி ஆனது போதும். இவர் மீது நடவடிக்கை எடுத்தால் பல பெண்களின் வாழ்க்கை தப்பிக்கும். இவர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து இந்த பகுதி மக்களின் கண்ணீரை துடைக்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைக்கிறார்.

அதிமுக தலைமைக்கும் இவர் மீது புகார் அனுப்ப தயாராகி வருகின்றனர். விரைவில் இவர் கட்சியிலிருந்து களையெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
71%
வருத்தம்
14%
கோபம்
14%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response