அரசியல்
Now Reading
2020-ல் குளச்சல் துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்படும் – பொன் ராதாகிருஷ்ணன்
0

2020-ல் குளச்சல் துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்படும் – பொன் ராதாகிருஷ்ணன்

by Sub EditorSeptember 6, 2016

2020-ல் குளச்சல் துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். கன்னியாகுமரி மாவட்டம் இனயத்தில், குளச்சல் வர்த்தக துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், நேற்று தொலையாவட்டத்தில் துறைமுக நிர்வாக அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த குளச்சல் துறைமுத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தந்தததற்காக முதல்வர் ஜெ.,க்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் அமைவதால் மாவட்டம் வளர்ச்சி அடையும். இங்குள்ள மக்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும். மீனவர்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படாது. கடலுக்குள் மண் நிரப்பி துறைமுகம் அமைக்கப்படும். இதற்காக 200 ஏக்கம் நிலம் மட்டுமே எடுக்கப்படும்.

ஆனால் துறைமுகத்தை இணைக்க நான்கு வழி சாலை மற்றும் ரயில் பாதை அமைக்க ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படும். சிங்கப்பூர், மும்பை போன்ற இடங்களில் கடலுக்குள்தான் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் அமைந்துள்ள எண்ணூர், கொச்சி போன்ற பல இடங்களிலும் மீனவர்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் மீன் பிடித்து வருகின்றனர். குளச்சல் துறைமுகம் வந்தால் நன்மை அடைய போவது மீனவர்கள்தான். இங்கும் பிடிக்கும் மீன்களை சுலபமாக ஏற்றுமதி செய்யமுடியும்.

துறைமுகம் அமைவதால் நீரோடி முதல் குளச்சல் வரை கடற்கரை கிராமங்கள் அழிந்து விடும் என்று புரளியை கிளப்பி விடுகிறார்கள். அரசியல் நோக்கத்துக்காக சிலர் இப்படி செசய்கிறார்கள். 2017-ல் துறைமுகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டால் 2020 -ல் இங்கிருந்து கப்பல் புறப்பட்டு செல்லும். பத்து ஆண்டுகளில் குமரிமாவட்டம் சிங்கப்பூருக்கு இணையாக மாறும். குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிக்கு 2300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு விமான நிலையம் அமைக்கவும் முயற்சி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
100%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response