சினிமா
Now Reading
ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார் ஆர்.கே.சுரேஷ்!
0

ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார் ஆர்.கே.சுரேஷ்!

by Sub EditorSeptember 7, 2016

‘ஸ்டுடியோ 9’ என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வந்த ஆர்.கே.சுரேஷ், பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளிவந்த ‘மருது’ படத்திலும் கொடூரமான வில்லனாக வந்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில், தொடர்ந்து வில்லன் வேடங்களில்தான் நடிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது புதிய படமொன்றில் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார் ஆர்.கே.சுரேஷ். இவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

மேலும், இப்படத்தின் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் யார் என்பது குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த ‘தர்மதுரை’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response