அரசியல்
Now Reading
நத்தம் விஸ்வநாதனுக்கு தொடரும் சிக்கல்
0

நத்தம் விஸ்வநாதனுக்கு தொடரும் சிக்கல்

by editor sigappunadaSeptember 15, 2016

 

17-1463461688-natham-vishwanathan-1-2-600

நகை மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனிடம் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தவர் நத்தம் விசுவநாதன். இவருக்கு சொந்தமான பண்ணை வீடு திண்டுக்கல் அடுத்துள்ள வேம்பார்பட்டியில் உள்ளது.

இங்கு கடந்த 12-ந் தேதி வருமான வரித்துறையினர் சோதனைக்கு வந்தனர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் இருந்ததை அடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நேற்று 3-வது நாளாக நத்தம் விசுவநாதனிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

நத்தம் விசுவநாதனுக்கு சொந்தமான கல்லூரி, அலுவலகம் மற்றும் உறவினர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் விசுவநாதனின் மகன் அமர்நாத்திடமும் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கரூரைச் சேர்ந்த அன்புநாதன் என்பவர் வீட்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.4 கோடியே 70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியதில் இந்த பணம் வந்த வி‌ஷயத்தில் நத்தம் விசுவநாதனுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதனை அடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகிறோம்.

மேலும் மின்சார கொள்முதலில் நடந்த முறைகேடு தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மட்டுமின்றி சென்னையில் உள்ள விசுவநாதனுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத நகைகள் ஆகியவற்றை வைத்து விசுவநாதனிடம் விசாரணை நடத்தி வருகிறோம். தற்போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பான விபரங்களை தெரிவிக்க இயலாது என்றா

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response