அரசியல்
Now Reading
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாஜக தயக்கம் காட்டுகிறது – சீமான்
0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாஜக தயக்கம் காட்டுகிறது – சீமான்

by editor sigappunadaSeptember 18, 2016

senthamizhan_seeman

கர்நாடகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டுவதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாஜக அரசு தயக்கம் காட்டிவருவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

தியாகி இரட்டைமலை சீனிவாசனின் 71-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிரில் அமைந்துள்ள அவரின் மணி மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சீமான், காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று நடந்துகொள்ள வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

மேலும், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது போல் தமிழக அரசியல் கட்சிகள் செயல்படுவது இல்லை என குற்றம்சாட்டினார்.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்