விளையாட்டு
Now Reading
டெஸ்ட் தொடரில் அஸ்வினுக்கு தொடர் நாயகன் விருது…
0

டெஸ்ட் தொடரில் அஸ்வினுக்கு தொடர் நாயகன் விருது…

by Sub EditorOctober 12, 2016

டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் அஸ்வின் முதலிடத்தை பெற்றுள்ளார். 3-வது இடத்தில் இருந்த இந்திய வீரர் அஸ்வின் 900 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகளில் விளையாடியது. இதில் இந்தியா 3 டெஸ்டுகளையும் வென்று நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது. இந்த தொடரில் மொத்தம் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த டெஸ்ட் தொடரில் அஸ்வின் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார். இதன் மூலம் தொடர்ந்து 4 டெஸ்ட் தொடர்களில் தொடர் நாயகன் விருது பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதுவரை 39 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற அஸ்வின் 220 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலிலும் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response