சினிமா
Now Reading
‘ரெமோ’ படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் – சிவகார்த்திகேயன்
0

‘ரெமோ’ படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் – சிவகார்த்திகேயன்

by Sub EditorOctober 12, 2016

‘ரெமோ’  படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது சிவகார்த்திகேயன் பேசும்போது…

‘ரெமோ’ படத்தில் யோகி பாபுவுக்காக இரண்டு கிளைமாக்ஸ் எடுத்தார்கள். ஒரு கிளைமாக்ஸ் தற்போது நீங்கள் திரையில் பார்த்துக் கொண்டிருப்பது. இன்னொரு கிளைமாக்சில் நான் புடவை கடையில் புடவை எடுக்க போயிருப்பேன். அப்போது, யோகி பாபு அங்கே வந்து நம்முடைய கல்யாண புடவையை எப்போது எடுக்கிறது என்று கேட்பார். அப்போது நான் டென்ஷனாகி இவனை எப்படியாவது காலி பண்ணனும்னு நினைச்சி, ரொம்ப நாளா நான் உங்ககிட்ட ஒண்ணு காட்டணும்னு ஆசைப்படறேன்னு சொல்வேன். அதற்கு யோகிபாபு நானும் அதை ரொம்ப நாளா பார்க்கணும்னு ஆசைப்படுறேன்னு சொல்வார்.

உடனே ரெண்டு பேரும் டிரையல் ரூமுக்குள் சென்று விடுவோம். அப்போது உள்ளிருந்து ‘ஆ’ என்ற சத்தம் மட்டும் வெளியே கேட்கும். அதன்பிறகு நான் வெளியே வந்துவிடுவேன். பிறகு அவர் கண்ணீர் மல்க வெளியே வருவார். அப்போது புடவை கடையில் வேலை பார்ப்பவர் யோகி பாபுவிடம் வந்து, சார் ஏதாவது பார்க்கிறீங்களா? என்று கேட்பார். பார்த்துட்டேன்டா என்று யோகி பாபு சொல்வார். அதற்கு மறுபடியும் புடவைக் கடைக்காரர் வெரைட்டியா ஏதாவது பார்க்கிறீங்களா? என்று கேட்பார். இதுல என்னடா வெரைட்டி என்று சொல்லி முடிப்பார்.

இதுதான் இன்னொரு கிளைமாக்ஸாக இருந்தது. ஆனால், இது படத்தில் இடம்பெறவில்லை. படம் தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக இதை தூக்கிவிட்டு தற்போது இருக்கும் கிளைமாக்ஸை வைத்துவிட்டோம்.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response