அரசியல்
Now Reading
என் மீது வேண்டுமென்றே அவதூறு பிரசாரம் செய்கின்றனர்: அர்ஜூன் சம்பத் பேட்டி
0

என் மீது வேண்டுமென்றே அவதூறு பிரசாரம் செய்கின்றனர்: அர்ஜூன் சம்பத் பேட்டி

by editor sigappunadaOctober 13, 2016

1370663866_arjun_sampath_350

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆயுத பூஜையையொட்டி தனது வீட்டில் அரிவாள், கத்தி, 2 துப்பாக்கிகள் வைத்து பூஜை செய்து வழிபட்டார். இந்த படத்தை அவர் பேஸ்புக்கில் வெளியிட்டார்.

இதுதொடர்பாக சென்னை, கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர்களிடம் பல்வேறு அமைப்புகள் சார்பில் புகார் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அர்ஜூன் சம்பத் மீது இந்திய தண்டனை சட்டம் 153(ஏ)- மத வேற்றுமை உணர்வை தூண்டும் விதத்தில் செயல்படுதல், 25(1)(ஏ) -ஆயுத சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அர்ஜூன் சம்பத் வெளியிட்ட போட்டோவில் இருந்த 2 துப்பாக்கிகளில் ஒன்று அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி ஆயுதப்படை துணை கமி‌ஷனருக்கு, மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஆயுதப்படை துணை கமி‌ஷனர் பாஸ்கரன் விசாரணை நடத்தி வருகிறார்.

போலீசாரின் இந்த நடவடிக்கை குறித்து அர்ஜூன் சம்பத் கூறியதாவது:-

நாங்கள் இந்து மக்களுக்காக கடந்த 20 வருடங்களாக ஜனநாயக ரீதியில் போராடி வருகிறோம். ஆயுத கலாசாரத்தை நாங்கள் எதிர்க்கிறோம். என் மகன் ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறான். அந்த துப்பாக்கியை வைத்து பூஜை செய்து, புகைப்படத்தை எனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டால் எப்படி தவறாகும்?

நான் அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகிறேன். இதை பிடிக்காதவர்கள் என் மீது அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டு என் மீது புகார் கொடுத்துள்ளனர்.

கோவையில் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்த வாலிபர்கள் குறித்து தேசிய புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை திசைதிருப்புவதற்காக என் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

காவல் துறையும் சிலரின் நிர்பந்தத்தின் பேரில், ஒரு தலைபட்சமாக செயல்பட்டு யாரையோ திருப்திபடுத்துவதற்காக என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response