க்ரைம்
Now Reading
சி.பி.ஐ. அதிகாரி என கூறி ஏமாற்றிய சென்னை போலீஸ்காரர் பழனியில் கைது
0

சி.பி.ஐ. அதிகாரி என கூறி ஏமாற்றிய சென்னை போலீஸ்காரர் பழனியில் கைது

by editor sigappunadaOctober 13, 2016

201610131454021239_chennai-policeman-arrested-in-palani_secvpf

பழனி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு போலீஸ் உயர்அதிகாரிகள் பயன்படுத்தும் நீலநிற சுழல்விளக்கு பொருத்தப்பட்ட காரில் ஒருவர் வந்தார். அவர் சப்-கலெக்டர் வினித்தை சந்தித்து தனது பெயர் ராமர் என்றும், சி.பி.ஐயில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்கான அடையாள அட்டையை காண்பித்த அவர் தனது உறவினர் ஒருவர் நிலம் வாங்கியதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவருக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

அதன்பின்னர் அவர் காரில் புறப்பட்டு சென்றுவிட்டார். அவரின் நடவடிக்கையில் சப்-கலெக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலி நபராக இருக்கலாம் என்று கருதியதால் பழனி டவுன் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சி.பி.ஐ அதிகாரி என ஏமாற்றியது தெரியவந்தது. தேனி அரண்மனைபுதூரை சேர்ந்த அவரது பெயர் ராமர்(வயது30). சென்னையில் ஆயுதப்படை போலீசாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் குடும்பத்தினருடன் பழனிக்கு வந்துள்ளார். அவர் எதற்காக தன்னை சி.பி.ஐ அதிகாரி என கூறினார். இதேபோல் பொய் சொல்லி வேறு இடங்களில் மோசடி செய்துள்ளாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரை கைது செய்து அவர் பயன்படுத்திய கார், போலி அடையாள அட்டை ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response