க்ரைம்
Now Reading
பார் பெண்களுடன் நடனம் ஆடிய உதவி இன்ஸ்பெக்டருக்கு சஸ்பெண்ட்!!!
0

பார் பெண்களுடன் நடனம் ஆடிய உதவி இன்ஸ்பெக்டருக்கு சஸ்பெண்ட்!!!

by Sub EditorOctober 13, 2016

பீகாரின் போஜ்பூர் மாவட்டம் கோயில்வர் காவல் நிலையத்தை சேர்ந்த மூன்று காவலர்கள் பார் பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ நேற்று அப்பகுதியில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் உயரதிகாரிகள் நடனம் ஆடிய மூன்று காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

இதுகுறித்து பாட்னா மண்டல ஐ.ஜி நய்யார் ஹஸ்னைன் கான் கூறுகையில் “இந்த சம்பவம் தொடர்பாக உதவி சப்-இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளோம். சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூவரும் நேற்று முன்தினம் கோயில்வர் பகுதியில் நடைபெற்ற விஜயதசமி பண்டிகையில் பார் பெண்களுடன் நடனம் ஆடியுள்ளனர். அந்த வீடியோவில் இருந்தது அவர்கள் தான் என்பதை உறுதி செய்தபிறகே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.

மேலும், மூவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் மத்தியில் காவலர்கள் இதுபோல நடனம் ஆடியதை தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜயதசமியை முன்னிட்டு கோயில்வர் நகரத்தை சேர்ந்த பூஜை குழுவினர் இந்த நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response