உலகம்
Now Reading
21 பெண்களை விடுதலை செய்தது போகோ ஹராம்: நைஜீரிய அரசு தகவல்
0

21 பெண்களை விடுதலை செய்தது போகோ ஹராம்: நைஜீரிய அரசு தகவல்

by editor sigappunadaOctober 13, 2016

201610131651468237_boko-haram-releases-21-girls-to-nigerian-government_secvpf

நைஜீரியாவின் சிபோக் பகுதியில் பள்ளியில் தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவிகளை போகோ ஹராம் தீவிரவாதிகள் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்தி சென்றனர். 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கடத்தி செல்லப்பட்டனர்.

அவர்களை மீட்க கோரி சாலைகளில் இறங்கி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாணவிகளை மீட்கும் பணியில் நைஜீரிய ராணுவம் தீவிரப்படுத்தப்பட்டது. அமெரிக்காவும் உதவி குழுவை அனுப்பியது.

ஆனால் மாணவிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது. இதற்கிடையே மாணவிகளை தீவிரவாதிகள் மதமாற்றம் செய்துவிட்டனர் என்று வீடியோ காட்சிகள் வெளிவந்தது.

இந்நிலையில், கடத்தி செல்லப்பட்ட 200 பேரில் 21 பெண்களை போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு விடுதலை செய்துள்ளதாக நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே நைஜீரிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கர்பா ஷெகு இது குறித்து கூறுகையில், “மீதமுள்ளவர்களை விடுதலை செய்வது குறித்து தொடர்ச்சியாக போகோ ஹராம் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றார்.

முன்னதாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் சுவிஸ் அரசு மூலம் போகோ ஹராம் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response